Accaddemy

மடவளை மீகம்மனவத்த மின்சார சபை ஊழியர் மின்சார கம்பத்தில் பலி.



-ஜே.எம்.ஹபீஸ்-

வத்துகாமம் மீகம்மனவத்த எனுமிடத்தில் வசித்த இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் கெகிராவை பிரதேசத்தில் வைத்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.


நேற்று 5 ம் திகதி கெகிராவை கனேவல்பொல வீதியில் மின்சார கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த இவர் மீது அதி சக்தி வாய்ந்த மின்சாரம் தாக்கியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதில்  கடுமையாகப் பாதிக்கப்பட்ட  நிலையில் கெகிராவை வைத்திய சாலையில் அனுமதித்த போதும் அங்கிருந்து தம்புள்ளை வைத்திய சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

தம்புள்ளை வைத்திய சாலையில் சிகிற்சை பலனின்றி நேற்று 5 மாலை இவர் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வத்துகாமம் மீகம்மனவத்த எனுமிடத்தில் வசித்த சுரங்க சஞ்சீவ ரத்நாயக்க என்ற 34 வயதுடையவராவார்.


இவரது மரணம் தொட்ர்பான மேலதிக விசாரணைகளை கெகிராவை பொலீஸாரர் மேற்கொண்டுள்ளனர்.



மடவளை மீகம்மனவத்த மின்சார சபை ஊழியர் மின்சார கம்பத்தில் பலி. மடவளை மீகம்மனவத்த  மின்சார சபை ஊழியர்  மின்சார கம்பத்தில் பலி. Reviewed by Madawala News on 11/06/2016 01:50:00 PM Rating: 5