Free Space

மன்னார் கடற்கரையில் அரியவகை கடற்பன்றி ஒதுங்கியது.



மன்னார், தாவில்பாடு கடலோரப்பகுதியில் கடற்பன்றி ஒன்று, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (08) கரையொதுங்கியது.

  இறந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த பன்றியானது, 5 அடி நீளமும் 450-500 கிலோகிராம் எடை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

கடற்கரையில் ஏதோ விசித்திரமான பொருள் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து, உரிய இடத்துக்கு விரைந்த மன்னார் வனவிலங்கு உதவிப்பணிப்பாளர் அசோக ராஜபக்ஷ, இவ்வாறு கரையொதுங்கி இருப்பது அரியவகை இனத்தைச் சேர்ந்த கடல் பன்றி என்று கூறியுள்ளார்.

இது, இலங்கைக் கடலில் காணப்படுகின்றமை மிகவும் அபூர்வமானது என்றும் எமது நாட்டுக்கென்று மொத்தம் 8 கடல் பன்றிகளே காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  எனினும், இவற்றுள் சில அழிவுறும் நிலையில் இருப்பதாகவும் இவை அழிவடைவதற்கான காரணம் குறித்துக் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


மன்னார் கடற்கரையில் அரியவகை கடற்பன்றி ஒதுங்கியது. மன்னார் கடற்கரையில் அரியவகை  கடற்பன்றி ஒதுங்கியது. Reviewed by Madawala News on 11/09/2016 10:06:00 AM Rating: 5