சிலாப பிரதேச பெண் சவூதி வீட்டு எஜமானியால் கடுமையாக தாக்கப்பட்டதாக செய்தி...



சிலாபம் - பங்கதெனிய, மொரகெலே பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் தொழிலுக்காக சவூதி அரேபியா சென்று பல துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுத்த சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது.

மொரகெலே பிரதேசத்தில் ஶ்ரீமதி இனோகா என்ற 40 வயதுடைய பெண் கடந்த வருடம் சவூதிக்கு சென்றுள்ளார்.

சவூதிக்கு சென்று சுமார் 5 மாதங்களின் பின்னர் வீட்டு எஜமானியால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், உணவு, நீர் வழங்காமல் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பெண் தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார். அவர்களும் இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் குறித்த பெண் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு சவூதியில் வைத்து சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் அறிவித்துள்ளார்.

தொழில்தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப்பெண்கள் பல கொடுமைகளை அனுபவிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது வெளிவரத்தான் செய்கின்றன.
சிலாப பிரதேச பெண் சவூதி வீட்டு எஜமானியால் கடுமையாக தாக்கப்பட்டதாக செய்தி... சிலாப பிரதேச பெண் சவூதி வீட்டு எஜமானியால் கடுமையாக தாக்கப்பட்டதாக செய்தி... Reviewed by Madawala News on 11/21/2016 02:49:00 PM Rating: 5