Kidny

Kidny

தூக்கு கயிறுடன் செல்பி எடுத்துவிட்டு தற்கொலை செய்த இளைஞர்.



இந்தியா :

ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் துணியை கழுத்தில் தூக்குக் கயிறு போல் மாட்டிக்கொண்டு தன்னைத்தானே சுயபடம் (செல்ஃபி) எடுத்துக் கொண்ட பிறகு, ஓர் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கிரந்தி குமார் (28) என்பவர் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாதின் ரமந்தாபூர் பகுதியில் அவர் வசித்து வந்தார். கார் ஓட்டுநரான அவர் தனது இல்லத்தில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் அளித்தனர்.

அதன்பேரில் அங்கு சென்றபோது, அவரது சட்டை பையில் இருந்த செல்லிடப்பேசியை ஆய்வு செய்தோம். அதில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு விசிறியில் துணியைக் கட்டி அதை கழுத்தில் தூக்குக் கயிறு போல் கட்டிக்கொண்டு அவர் தன்னைதானே எடுத்துக் கொண்ட சுயபடம் இருந்தது.

மேலும், குடும்பப் பிரச்னை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக எழுதி வைத்திருந்த கடிதமும் அவரது இல்லத்தில் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தூக்கு கயிறுடன் செல்பி எடுத்துவிட்டு தற்கொலை செய்த இளைஞர். தூக்கு கயிறுடன் செல்பி எடுத்துவிட்டு தற்கொலை செய்த இளைஞர். Reviewed by Madawala News on 11/12/2016 11:31:00 AM Rating: 5