Accaddemy

மீனவர் வலைகளில் கொத்து கொத்தாக சிக்கும் இரட்டை தலை சுறாக்கள் .



இரட்டை தலை மர்ம சுறாக்கள்!  காரணம் தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்!!

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று


கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கடற்பகுதியில் இரட்டைத் தலை சுறாக்கள் மீனவர்களின் வலையில் வந்து சிக்கின. இதனை கண்டு ஆச்சர்யமடைந்த விஞ்ஞானிகள் அவற்றை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் தற்போது கொத்து கொத்தாக இரட்டை தலை சுறாக்கள் மீனவர்களின் வலைகளில் சிக்கி வருகின்றன. இவற்றின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு உயிரினத்திலும் வினோதமாக சில உயிர்கள் பிறக்கும். ஆனால் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

 இரட்டை தலை சுறாக்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் காணப்படுவது தான் விஞ்ஞானிகளின் குழப்பத்திற்கு காரணம்.  இனத்திற்குள்ளேயே தொடர்ந்து உறவு கொள்ளுவதால் இப்படி வினோதமாக பிறக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நீள சுறாக்கள் ஒரே நேரத்தில் 50 குட்டிகளை இடுகின்றன. என்றும் அதே நேரம் கருவில் இருக்கும் அனைத்து குட்டிகளும் இரட்டை தலையுடன் இருந்தால் மட்டுமே  அதன் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருக்கும் என்றும் இது  ஆச்சர்யமான ஒன்று என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி --தி டெய்லி மெயில் http://www.dailymail.co.uk/sciencetech/article-3905028/Mystery-TWO-HEADED-sharks-mutant-fish-appearing-alarming-rates-no-one-knows-why.html

 Accessible specimens of mutated sharks are few and far between, making them a challenge for scientists to study

மீனவர் வலைகளில் கொத்து கொத்தாக சிக்கும் இரட்டை தலை சுறாக்கள் . மீனவர் வலைகளில் கொத்து கொத்தாக  சிக்கும் இரட்டை தலை சுறாக்கள் . Reviewed by Madawala News on 11/06/2016 05:45:00 PM Rating: 5