Free Space

மாட்டு லொறியை விரட்டிச் சென்று சுட்ட போலீசார்... இருவர் தப்பியோட்டம்.



- ஜே.எம்.ஹபீஸ்-

ஹஸலக்க பொலீஸ் பிரிவில் மாடுகளைக்கடத்திச் சென்ற லொரி ஒன்றின் மீது பொலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து லொரியைக் கைப்பற்றி போதும் சாரதியும் லொரின் நடாத்துணரும் ஓடித்தப்பி தலைமறைவாகியுள்ளனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-


(7.11.2016) போலீஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹஸலக்க பொலீசாருக்கு; கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறிப்பிட்ட லொரி ஒன்றை சோதனையிட நிறுத்திய போது அவர்கள் கட்டுப்பாட்டை மீறி லொரியை வேகமாகச் செலுத்தி தப்பிச் சென்றுள்ளனர். மஹியங்கனை கண்டி வீதியில் வேரகங்தொட்டைப் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாகப் பொலீசார் ஜீப் வண்டியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் லொரியை பின் தொடாந்து சென்று அதன் டயர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.


இதன் காரணமாக லொரியிலிருந்த சாரதியும் உதவியாளரும் லொரியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். அச்சமயம் வாகனத்தை சோதனையிட்ட போது அதனுள் 14 மாடுகள் சட்ட விரோதமான முறையில் எடுத்துச் செ;லலப்பட்டமை தெரிய வந்தள்ளது. லொரியையும் 14 மாடுகளையும் பொலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடாபாக ஹஸலக்க பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மாட்டு லொறியை விரட்டிச் சென்று சுட்ட போலீசார்... இருவர் தப்பியோட்டம். மாட்டு லொறியை விரட்டிச் சென்று சுட்ட போலீசார்... இருவர் தப்பியோட்டம். Reviewed by Madawala News on 11/07/2016 09:21:00 PM Rating: 5