Kidny

Kidny

துறைமுகத்தில் இருந்து, சேர் இராமநாதனை சிங்கள மக்கள் தோள்களில் வைத்துச் துாக்கிச் சென்றனா். கடும்போக்குடையவா்களுக்கு இதெல்லாம் தெரியாது.(அஷ்ரப் ஏ சமத்)

இந்த நாட்டில் யாழ் பிறந்து இந்த நாட்டுக்கு கீர்த்தியை ஏற்படுத்தி அப்போது சிங்கள மக்களால் பெரிதும் கவரப்பட்டவா்தான் உதார புருசா்  சேர் பொண்னம்பலம் இராமநாதனை  இந்த நாட்டின்  வாழும் சிங்கள மக்களது  கல்வி, சுதந்திரம், மற்றும் பௌத்த மதம், மொழி  மற்றும்  இந்த நாட்டின் நிருவாக முறை போன்ற பல்வேறு துறைகளில் இந்த நாட்டுக்காக சேவையாற்றியனாா்.
 
இவ்வாறான தமிழ்த்  தலைவா்களை தற்போதைய இளம் சமுகங்கள்   மறந்துள்ளனா். இனரீதியில் சந்தேகம் கொண்டுள்ளனா்.  இனக் குரேதங்களை சிலா் விதைக்கின்றனா்.  இவ்வாறான தமிழ்த் தலைவா்களது   சரித்திரம்  தெற்கில்  வாழும் மக்களுக்கு அறிவிருத்தும்   பொருட்டே  எதிா்வரும் நவம்பா் 30ஆம் திகதி காலியில் உள்ள தெண்மாகான ஆளுணா் செயலகத்தில் நினைவு பைவபவம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம்.  என தென் மாகாண ஆளுனா்  கேமகுமார நாணயக்கார தெரிவித்தாா்.

இன்று (24) கொழும்பு மீள் குடியேற்ற அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் வைத்தே மேற்கண்ட  தகவல்களை தென் மாகாண ஆளுணா்  கேமகுமார நாணயக்கார தெரிவித்தாா்.  இவ்  ஊடக மாநாட்டில் மீள்குடியேற்றம்  மற்றும் சிரைச்சாலைகள், ஹிந்து விவகார அமைச்சா் டீ.எம். சுவாமிநாதனும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தாா்.

தொடா்ந்து உரையாற்றிய ஆளுணா் தெரிவித்தாவது -

 சேர்  ராமநாதானின் பேரர்  ஆன  அமைச்சா் டி.எம்.  சுவாமி நாதனை பிரதம அதிதியாகக் கொண்டு  சேர் இராமநாதன் பற்றிய சரித்திர நிகழ்வுகள்  தெற்கில் வாழும்  சிங்கள மக்களுக்கிடையே நடாத்தப்படும்.  இதில் பாடசாலைகளின்  உயா்தர மாணவா்கள், யாழ் பல்கலைக்கழக பேராசிரயா்கள் ஊவா பல்கலைக்கழக உபவேந்தா் , ஊடகவியலாளா்கள் மேல் மாகாண ஆளுணா் லோகேஸ்வரன் போன்றேராா்கள்  கலந்து கொள்வாா்கள். அவா் பற்றிய நினைவுப்பேருரைகள், அவா் செய்த சேவைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.


 வெள்ளையர்களது ஆட்சிக் காலத்தில்  சிங்கள தலைவா்களான  டி.எஸ் சேனாநாயக்க, எப் ஆர் சேனாநாயக்க, ரீ.பி ஜயதிலக்க,  போன்றோரை சிரையில் அடைத்தபோது.  இலங்கையில் அப்போதைய ஆளுனருக்கு எதிராக பிரித்தாணியாவுக்குச் சென்று லண்டன் விக்டோரிய அரசரைச் சந்தித்து வாதாடி விடுதலை பெற்றுக் கொடுத்தவா் சேர் இராமநாதன்.    அவரை துறைமுகத்தில் இருந்து சிங்கள மக்கள் தோள்களில் வைத்துச்  துாக்கிச் சென்றனா்.

இவ்வாறான ஒரு தலைவாின்  சகோதரா்  சேர்  பொண்னம்பலம் அருணாச்சலம்  இவா்களின் உருவச்  சிலைகள்  ஜனாதிபதி செயலகத்தில் உள்ளன.  தற்போது சில கடும்போக்குடையவா்களுக்கு இவ்வாறான விடயங்கள் தெரியமாமல் இனக்குரோதங்களை நடாத்துகின்றனா்.

 நமக்கு சுதந்திரம் மற்றும் நமது பொளத்த மதம்,  கல்விக் கூடங்கள், சிங்கள மொழிக்கு அவா்கள் ஆற்றிய பணிகள், இந்த நாட்டில் தற்போது நடைமுறையில் உ ள்ள நீதி,  நிர்வாகங்களை ஏற்படுத்தியவா்கள் இந்த தமிழ்த் தலைவா்கள் தான்  இவற்றினை தற்போதைய சமுகத்திற்கு  அறிவுறுத்தல் வேண்டும். இலங்கையின் 9 மாகாண ஆளுணா்களும் இவ் தினத்தினை சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் இவ் நினைவு தினத்தினை நடாத்தல் வேண்டும்.

  தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களது உறவுகள் கடந்த காலங்களில் பொண் எழுத்துக்கலாள் எழுதப்படல் வேண்டும். அதற்காக அவா்கள் இந்த நாட்டுப்பற்றுக்காக லண்டன் சென்று அட்வட்கேடடாக கற்று  ஆற்றிய சேவைகள்  அதனை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய முறைமை என்பன  தென் பகுதி  மக்க ளுக்கு தெரியாமல் உள்ளது. என  தெ ண் மாகாண ஆளுனா் தெரிவித்தாா்.


இங்கு  கருத்து தெரிவித்த  அமைச்சா் சுவாமி நாதன் -

இந்த நாட்டில் சகல சமுகங்களும் சமாதானமாகவும் நீதியாகவும்  அன்னியோண்னியமாகவும் வாழல்  வேண்டும்.  நேற்றுக்  4 மதங்கள் சம்பந்தமாக மத விடயங்கள் பொறுப்பாண அமைச்சா்களும்    நீதியமைச்சருடன் கலந்துரையாடிணோம்.  சகல மதத் தலைவா்களை அழைத்து ஜனாதிபதி தலைமையில் ஒரு மாநாடு நடத்தவுள்ளோம்.   அதன் பின்னா்  மாவட்ட ரீதியிலும் நல்லிணக்க , சகல மதங்களதும்  தலைவா்கள் கூடி பேசக்கூடிய வகையில் கூட்டங்கள்  நடாத்துவதற்கும்  தீர்மாணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தாா்.

வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது திட்டத்தினை நான் அமுல்படுத்துவதற்கே எண்னியுள்ளேன். ஆனால் வடக்கு மாகாணசபை அதனை தடுக்கின்றது. அவா்களாவது வடக்கில் அல்லரும் மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கின்றாா்கள்  இல்லை. வடக்கில் ஒரு கியுப் மணல் 40 ஆயிரம் ருபாவுக்கு விற்கும்போது எவ்வாறு அங்கு தமிழ் கலாச்சாரத்திற்குரிய வீடுகள் அமைப்பது. இந்த வீடுகள் உலகில் பல பாகங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள. 1 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்க உள்ளோம். இரண்டு வருமாகி விட்டது. ஒரு அபிவிருத்தியையும் நடைமுறைப்படுத்த வடக்கு மாகாணசபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவும் அமைச்சா் சுவாமி நாதன் தெரவிித்தாா்.

அத்துடன் சிறைச்சாலைகள் அதிகாரிகள் 150  பேர் புதிதாக  நியமணத்திற்காக நேர்முகப்  பரிட்சை மட்டுமே நடைபெற்றது.  அந் நியமணத்தில் வழங்குவதில் சிலா் பணம் பெற்றுள்ளாா்கள். அதற்காகவே  அந்த நியமனங்களை இடை நிறுத்தியுள்ளேன். இந் நியமனத்திற்காக  சகல பாராளுமனற உறுப்பிணா்களளும் தமது பிரதேசத்தில் இருந்து  பெயா்களை எனக்கு சிபாா்சு செய்திருந்தாா்கள்.  எனவும் அமைச்சா் சுவாமிநாதான் அங்கு  தெரிவித்தாா்.
துறைமுகத்தில் இருந்து, சேர் இராமநாதனை சிங்கள மக்கள் தோள்களில் வைத்துச் துாக்கிச் சென்றனா். கடும்போக்குடையவா்களுக்கு இதெல்லாம் தெரியாது. துறைமுகத்தில் இருந்து, சேர் இராமநாதனை சிங்கள மக்கள் தோள்களில் வைத்துச்  துாக்கிச் சென்றனா்.  கடும்போக்குடையவா்களுக்கு இதெல்லாம் தெரியாது. Reviewed by Madawala News on 11/24/2016 03:05:00 PM Rating: 5