Free Space

SLTJயை கட்டுப்படுத்தும்படி அறிஞர் PJ க்கு கடிதம் அனுப்பிவைப்பு ..


இஸ்ஸதீன் றிழ்வான்

தோஹா,கத்தார்

14/11/2016

 

மரியாதைக்குரிய பீ.ஜைனுல் ஆபிதீன்,

TNTJ தலைமையகம்

மண்ணடி, சென்னை

tntjho@gmail.com


" tntjpureislam@gmail.com


 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹ்

 

அன்பின் ஆசான் மரியாதைக்குரிய PJ அவர்களே!

 

உங்களுடைய சுகம், தேகஆரோக்கியத்திற்கு அல்லாஹ்வைபிரார்த்தி ஆரம்பிக்கின்றேன்.

 

விடயம்: SLTJயை கட்டுப்படுத்துவது தொடர்பாக‌

 

இலங்கையில் இயங்கிவரும் SLTJ என்கின்ற கிளைதொடர்பான முக்கியமான விடயம் ஒன்றை உங்கள்கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

 

இலங்கையில் இயங்கிவரும் SLTJ அமைப்பு பல சமூகப்பணியை செய்து மக்கள் மனங்களை வென்றுவருவது குறித்துநான் சந்தோசமடைகின்றேன்.

 

ஆனால் இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் சிங்களமக்களை வம்புக்கு இழுத்தெடுக்கும் விதத்திலான அண்மைக்கால நிகழ்வுகள் சிறுபான்மை சமூகமாகிய‌ முழு முஸ்லிம்களுக்குமெதிரான சவாலாக மாறிவருவது குறித்துகவனம் செலுத்தும்படியும் இதுதொடர்பாக இவர்களைகட்டுப்படுத்தும்படியும் TNTJ யின் ஸ்தாபகர் என்ற வகையில்உங்களை அன்பாக வேண்டுகிறேன்.

 

“புத்தர் மாமிசம் உண்டார்” என்ற பேச்சிலிருந்து ஆரம்பமானஇனவாதம் இன்னும் தொடர்கின்றது. இது நாளுக்கு நாள்பெரும்பான்மை சமூகத்திலிருந்து புதிய புதிய இனவாதிகளைஉண்டுபன்னுகிறது.

 

இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கென நீண்டதொன்மைவாய்ந்த வரலாறும் மரியாதையும் இறுக்கின்றது, அதுகாலாகாலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது, அது ஒரு சில ஆக்குரோச பேச்சுக்களால் ஆர்ப்பாட்டங்களால் அழிந்துபோய்விடக்கூடாது.

 

ஹிக்மத்தான முறையில் பிற சமூகத்தின் மனங்களைவெல்லுகின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும்பொது விடயங்களில் இங்குள்ள பிற முஸ்லிம்அமைப்புக்களுடன் சேர்ந்துபோவதற்கும் ஆலோசனை வழங்குபடியும் இத்தால் வேண்டிக்கொள்கிறேன்.

 

அன்புடன்

மாற்றங்கள் தேவை இஸ்ஸதீன் றிழ்வான்

https://www.facebook.com/isadeenrilwan

http://changesdo.blogspot.qa/

 

 


SLTJயை கட்டுப்படுத்தும்படி அறிஞர் PJ க்கு கடிதம் அனுப்பிவைப்பு .. SLTJயை கட்டுப்படுத்தும்படி அறிஞர் PJ க்கு கடிதம் அனுப்பிவைப்பு .. Reviewed by Madawala News on 11/15/2016 01:08:00 AM Rating: 5