Ad Space Available here

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தௌபா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நேற்றய தினம் 21-11-2016  சகோதர் இப்திகார் ஹஸன் அவர்களின் ஆக்கமான SLTJ அமைப்பு தௌபா செய்யுமா? என்ற ஆக்கத்திற்கான பதிலாக இதனை பதிவிடுகின்றேன் .

அல்ஹம்துலில்லாஹ்!

சகோதரர் இப்திகார் ஹஸன் இஸ்லாத்தையும் இஸ்லாமிய வரலாறுகளில் முதன்மையான நபிமார்களின் வரலாறுகளை படிப்பினைகளோடு படிக்கக் கடமைப்பட்டுள்ளார் என்பதனை அவரது ஆக்கம் மிகத் தெளிவாக அவருக்குச் சுட்டிக்காட்டுவதை எம்மால் அறிய முடிகின்றது.


ஏனெனில் அனைத்து நபிமார்களும் மக்களுக்கு மத்தியில் மிகவும் உன்னதமானவர்களாக மதிக்கப்பட்டும் மக்கள் அவர்களுடைய கருத்துக்களை ஏற்க மறுத்தவர்களாகவும் அவர்களை திட்டம் தீட்டி வதை செய்யக் கூடியவர்களாகவும் தான் பெரும்பாலான மக்கள் அக்காலங்களில் வாழ்ந்து மடிந்தார்கள் என்பது வரலாற்றுச் சான்றாகும்.


உண்மையில் அன்று நபி இப்றாஹிம் (அலை) நேர்மையானவர்களாக வாழ்ந்து மக்களை தூய இஸ்லாமிய மார்க்கத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள் ஆனால் மக்கள் அவருக்கு வழங்கிய மிகப் பெரிய பரிசு என்ன?அவரை மக்கள் தீ குண்டத்தில் தூக்கி வீசி ஆனந்தம் கொண்டாடினார்கள் இந்தச் சம்பவம் சகோதரர் இப்திகார் ஹஸன் போன்ற குறுகிய சிந்தனையுடையவர்களுக்கு அன்றே சமர்ப்பணம்.


அது மட்டுமல்ல அன்று நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களுக்கு மத்தியில் உண்மையாளனாகவும் சத்தியவானாகவும் பார்க்கப்பட்டார்கள் வஹி எனும் இறைச் செய்தியை பெற்ற பின் மக்கள் அவர்களை அழைத்த விதம் கவிஞர், பைத்தியகாரன் பொய்யன் என்று அதற்குக் காரணம் என்ன சகோதரர் இப்திக்கார்? கொள்கையில் உறுதியா? கொள்கையில் கோளைத்தனமா? தஃவா முறை தெரியாதா? சிந்தியுங்கள்...


உண்மையில் 'வைக் கோல் கும்பியில் கிடக்கும் நாய் போல'; சில சகோதரர்கள் இந்த உலகம் அழியும் வரை இருப்பார்கள் அவர்கள் நல்லதை செய்யவும் மாட்டார்கள் செய்பவர்களை ஆர்வமூட்டவும் மாட்டார்கள் எனவே இப்படியானவர்களை நல்லவர்கள் கவனிக்கவும் மாட்டார்கள்.


'உரிமைகள் இன்றி வாழ்வு இல்லை' என்பார்கள் அந்தவகையில் நாம் அரசியல் யாப்பினால் வரையப்பட்ட உரிமைகளோடுதான் வாழ்கின்றோம் எமது உரிமைகள் அத்து மீறிப்பட்டால் அதற்காக போராட வேண்டும் என யாப்பும் சொல்கிறது இன்னும் எமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் கூற்pயிருக்கிறார்கள்.

இதனை அடிப்பமையாக வைத்துதான் sltj அமைப்பு போரட்டங்கள் மூலம் உரிமைகளை பாதுகாக்க போராடுகிறது ஆனால் சகோதரர் இப்திகார் ஹஸன் இதை பிழை என்று சொல்ல வருகிறாரா?

அன்மைக் காலமாக எமது தாயகத்தில் ஒரு சில இனவாதிகள் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் கொச்சைப்படுத்தி முஸ்லிம்கள் துதிக்கும் அல்லாஹ்வை கேவலப்படுத்தி அல்லாஹ்க்கு பொண்டாட்டி இரண்டா? மூன்றா? என்று கேட்டார்களே இதற்காக வாய் திறந்தது ளுடுவுது செய்த குற்றமா? சகோதரர் இப்திகார் ஹஸனே? குட்டக் குட்ட குனியும் கோழைகள்யல்லை இந்த sltj சகோதரர்கள் என்பதனை சகோதரர் இப்திகார் ஹஸன் புரிந்து கொள்ளவும்.


இன்னும் சகோதரர் இப்திகார் எதிர் பார்ப்பதைப் போல் இந்த விடையத்தில் ளுடுவுது அமைப்பு யாரிடமும் தௌவ்பா செய்யவும் மாட்டாது யாரிடமும் தௌவ்பா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. மாறாக இறைவனின் உதவியால் சத்தியத்தை சாதூரியமாக வென்றெடுக்கும் என்பதனை இப்திகார் ஹஸன்  போன்ற சில சகோதரர்களுக்கும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். இறைவன் யாவும் அறிந்தவன். அல்ஹம்துலில்லாஹ்

-ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி), இறக்காமம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தௌபா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தௌபா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. Reviewed by Madawala News on 11/22/2016 02:45:00 PM Rating: 5