Free Space

பிணை கிடைக்கவில்லை... SLTJ பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் அவர்கள் மீண்டும் விளக்கமறியலில்..


இனவாத கருத்துக்களை வெளியிட்டதாக  குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடக்கப்பட்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் அவர்களின் விடுதலை தொடர்பான வழக்கு 
இன்று  காலை 11.50 மணிக்கு  கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சுமார் மதியம் 12.30 வரை வாதப்பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.


இந்நிலையில் அவ்வழக்கு  மீண்டும் 2.00 மணிக்கு வழக்கு எடுக்கபட்டு வாதப்பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது .

அதனை அடுத்து  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் அவர்களை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அப்துல் ராசிக் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிராஸ் நூர்தீன் மற்றும் திரு. மைத்திரி குணவர்த்தன ஆகியோர் வாதங்களை மேற்கொண்டனர்.
பிணை கிடைக்கவில்லை... SLTJ பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் அவர்கள் மீண்டும் விளக்கமறியலில்.. பிணை கிடைக்கவில்லை...  SLTJ பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் அவர்கள் மீண்டும் விளக்கமறியலில்.. Reviewed by Madawala News on 11/29/2016 02:35:00 PM Rating: 5