Accaddemy

டொனால்டு டிரம்ப் அமெரிக்க தேர்தலில் மோசடி செய்தது இவ்வாறுதான்...



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

அமெரிக்காவில் கடந்த 8–ந் தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பாப்புலர் ஓட்டு’ என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றாலும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ‘எலெக்டோரல் ஓட்டு’ என்னும் தேர்தல் சபை வாக்குகளை அதிகம் பெற்றதால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்தலில் மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய 3 மாகாணங்களில் டிரம்ப் வெற்றியின் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக உள்ளது.

மறு ஓட்டு எண்ணிக்கை

மிச்சிகன் மாகாணத்தில் 16 தேர்தல் சபை வாக்குகளும், பென்சில்வேனியா மாகாணத்தில் 20 தேர்தல் சபை வாக்குகளும், விஸ்கான்சின் மாகாணத்தில் 10 தேர்தல் சபை வாக்குகளும் உள்ளன.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன், விஸ்கான்சின் மாகாணத்தில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்துமாறு கேட்டு மாகாண தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்தார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது. மறு ஓட்டு எண்ணிக்கைக்காக அவர் 52 லட்சம் டாலர் (சுமார் ரூ.34 கோடியே 84 லட்சம்) நிதி திரட்டியுள்ளார்.

தேர்தல் முறையில் ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் (சட்டவிரோதமாக மோசடி செய்து நுழைகிறவர்கள்) நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் குற்றம் சாட்டி உள்ளது.

தற்போது அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன், இதே குற்றசாட்டை கூறி உள்ளார். அதற்கான ஆதாரம் இருப்பதாக கூறி உள்ளார்.

இது குறித்து பெர்லினில் நடந்த இணையதள மாநாடு ஒன்றில் வீடியோ லிங் பேசிய எட்வர்டு ஸ்னோடன்  கூறியதாவது:-

டொனால்டு டிரம்ப் வெற்றி பெறும் வகையில்  மின்னணு வாக்கு இயந்திரத்தில்  கூஷிபேர் 2.0 என்ற மால்வேர் பயன்படுத்தப்பட்டு உள்ளது இதற்கான ஆதாரத்தை நாங்கள் வைத்து உள்ளோம்.நாங்கள் தேர்தலில் மோசடி நடைபெற்றது குறித்து ஆச்சரியப்பட வில்லை.அதற்கு பதிலாக டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக  இந்த தில்லு முல்லு செய்யப்பட்டது தான் ஆச்சரியமாக உள்ளது.

தேர்தல் என்பதே மோசடிதான். வாக்கு மோசடி என்பது பொதுவானது  எல்லா தேர்தல்களிலும்  உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறக்கூடியது.ஜனநாயகம் என்பது ஒரு அழகான மாய தோற்றம்.என கூறி உள்ளார்.
டொனால்டு டிரம்ப் அமெரிக்க தேர்தலில் மோசடி செய்தது இவ்வாறுதான்... டொனால்டு டிரம்ப் அமெரிக்க தேர்தலில் மோசடி செய்தது இவ்வாறுதான்... Reviewed by Madawala News on 11/28/2016 07:49:00 PM Rating: 5