Kidny

Kidny

இந்த மாதிரி செய்திகளை அனுப்புபவர்களை தான் முதலில் கொல்ல வேண்டும்.



ஒரு இனமுறுகளை ஏற்படுத்த பல அரசியல் தரப்புகளும் முயற்சிக்கும் இந்த நேரத்தில் நாமும் அவர்களுக்கு  சமூக ஊடகங்கள் மூலம் தீனி போட்டுக்
கொண்டு இருக்கின்றோம்.

சகோதரர் ராசிக் மற்றும் டான் பிரியசாத் ஆகியோரின் கைது. "சிங்கலே"யின் கண்டி ஊர்வலம். விஜேதாச ராஜபக்சவின் பாராளுமன்ற உரை. இந்த நான்கு சம்பவங்களும்தான் மீண்டும் மக்கள் மத்தியில் ஒருவகையான பதட்ட நிலை
உருவாகுவதற்கான உண்மையான காரணங்கள்.

ஆனால் நம் சகோதரர்கள் வட்சப் மற்றும் பேஸ்புக்கில் பகிரும் செய்திகளைப்பார்த்தால் வெகு சீக்கிரம்  முஸ்லிம் - சிங்கள யுத்தம் ஒன்று வரவிருப்பது போன்றும், அவற்றுக்கு நாம் தயாராக வேண்டும் என்பது போலவும் இருக்கின்றது.

நேற்று எனக்கு ஒரு வட்சப் தகவல் இப்படி வந்தது.

 "எமது ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்"
எல்லோரும் வீரமரணமடைய தயாராகுங்கள்" என்று இருந்தது.


அப்படி ஒரு யுத்தம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால், இந்த மாதிரி செய்திகளை அனுப்புபவர்களைதான் முதலில்கொலை செய்ய வேண்டும்.

மஹிந்த காலத்தில் இனவாதம் தலைவிரித்தாடியபோது சில தேரர்கள்
பேசிய நச்சுக்கருத்துக்கள்.அரசியல் வாதிகளின் பழைய இனவாத உரைகள்
எல்லாம் மீண்டும் தூசு தட்டப்பட்டு வட்சப்பில் வந்து நிறைந்து கொண்டு
இருக்கின்றன.

இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று சில தேரர்கள் செய்யும் சில்மிஷங்களையெல்லாம் ஏதோ முக்கிய செய்திகளைப்போல பகிர்ந்துகொண்டு இருக்கின்றார்கள்.

அடுத்து ஒரு கூட்டம் சிங்கள இனவாதப் பக்கங்களில் இஸ்லாத்துக்காக
குரல்கொடுக்கப்போய் வாங்கிக் கட்டிக் கொள்வதோடு, அவற்றை அவதானிக்கும்

நடுநிலையான சிங்கள மக்கள் மத்தியிலும் இஸ்லாம் குறித்த தப்பபிப்பிராயங்கள் ஏற்படக் காரணமாகின்றனர்.

உண்மையில் நாம் மிகப்பொருப்புடன் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த
வேண்டிய காலம் இது. இனவாத ரீதியாக ஏற்படும் பாதிப்பிரச்சினைகள் இங்கிருந்துதான் தோற்றம் பெறுகின்றன.

நமக்கு ஒரு பிரச்சினையின் உண்மையான வடிவம் தெரியாமல் இருக்கும்பொழுது அது குறித்து நாம் மௌனமாக இருப்பது
மிகப்புத்திசாலித்தனமான செயற்பாடு என்பது எனது அபிப்ராயம்.

எனவே கண்டதயெல்லாம் ஷெயார் செய்து தொலைக்காமல் கொஞ்சம் நிதானமாக வாசித்து அந்த செய்திகளில்மறைந்திருக்கும் சாதக / பாதக காரணிகளை சரியாக உள்வாங்கிக் கொண்டு, அவற்றை சமூகமயப்படுத்துவது குறித்து சிந்தித்து செயற்படுவது  எல்லோருக்கும் நல்லது.

- கட்டுரை : சப்வான் பஷீர் -
இந்த மாதிரி செய்திகளை அனுப்புபவர்களை தான் முதலில் கொல்ல வேண்டும். இந்த மாதிரி செய்திகளை அனுப்புபவர்களை தான் முதலில் கொல்ல வேண்டும். Reviewed by Madawala News on 11/22/2016 02:26:00 PM Rating: 5