ஸ்ரீபாத அருகில் ஹோட்டல் நிர்மாணிக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை தடை விதித்தது.



ஸ்ரீபாத  நல்லத்தண்ணி பீக்பீல்ட் தோட்டத்தில் ஓய்வூதிய விடுதி நிர்மாணிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய விடுதியை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள, இடத்தை கண்காணித்ததன் பின்னரே, மத்திய சுற்றாடல் அதிகாரிகள் மேற்கண்டவாறு தடைவிதித்துள்ளனர்.

மவுசாகல நீர்த்தேக்கத்துக்கு மேலாக, மரே நீர்வீழ்ச்சிக்கு அண்மையில் உள்ள தோட்டத்துக்கு சொந்தமான ஓய்வூதிய விடுதியை இடித்து உடைத்துவிட்டு, புதிதாக ஓய்வூதிய விடுதியொன்றை நிர்மாணிப்பதற்கு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் அனுமதி கிடைத்திருந்தது.

இந்நிலையிலேயே மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் மேற்கண்டவாறு, எனினும், இந்தத் தோட்டமானது வனஜீவராசிகள் திணைக்கள வலயத்துக்கு உட்பட்டது அல்ல என்று நல்லத்தண்ணி வனஜீவராசிகள் காரியாலயத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாக நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள் இந்த ஓய்வூதிய விடுதியானது டுபாய் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சில பிரிவினர் அந்த ஓய்வூதிய விடுதி நிர்மாணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபாத அருகில் ஹோட்டல் நிர்மாணிக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை தடை விதித்தது. ஸ்ரீபாத  அருகில் ஹோட்டல் நிர்மாணிக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை தடை விதித்தது. Reviewed by Madawala News on 11/01/2016 04:03:00 PM Rating: 5