நாட்டில் மத ரீதி­யா­க பதற்றத்தை ஏற்படுத்த பாரிய சதி முயற்சி.



நாட்டில் மத ரீதி­யா­கவும் இன­ரீ­தி­யா­கவும் விரி­சல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்தி நாட்டை அழி­வுக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு சில சக்­திகள் சதிமுயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது. இது தொடர்பில் அர­சாங்கம் மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப்­பு­டனும் செயற்­பட்டு வரு­கின்­றது என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு அறி­விக்­கின்றோம் என்று இணை அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.

தேசிய நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை குழப்பும் இவ்­வா­றான சில சக்­தி­களின் சதிமுயற்­சிகள் தொடர் பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முழு அர­சாங்­கத்­தி­னரும் அவ­தா­னத்­துடன் இருக்­கின்­றனர் எனவும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாடு நேற்று பாரா­ளு­மன்ற கட்டத் தொகு­தியில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:-

நாட்டை பொரு­ளா­தார மற்றும் அர­சியல் ரீதியில் முன்­னேற்­று­வ­தற்கு பத­வி­யி­லுள்ள நல்­லாட்சி அர­சாங்கம் பாரிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரும் போது அதனை தடுத்­து­நி­றுத்தி நாட்டை அழி­வுக்கு உட்­ப­டுத்தும் முயற்­சியில் சில சக்­திகள் செயற்­பட்டு வரு­கின்­ற­மையை நாங்கள் அறி­கின்றோம்.

அதா­வது மத ரீதி­யா­கவும் இன­ரீ­தி­யா­கவும் விரி­சல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்தி நாட்டை அழி­வுக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு சில சக்­திகள் சதி முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன. இது தொடர்பில் அர­சாங்கம் ஆழ­மான முறையில் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது.

அந்த வகையில் இந்த விடயம் குறித்து நல்­லாட்சி அஅ­ர­சாங்கம் மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப்­பு­டனும் செயற்­பட்டு வரு­கின்­றது என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு அறி­விக்­கின்றோம். அத்­துடன் இவ்­வா­றான சில சக்­தி­களின் சதி முயற்­சிகள் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முழு அர­சாங்­கத்­தி­னரும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.

இவ்­வா­றான நிலை­மையை தடுப்­ப­தற்கு அர­சாங்கம் முழு­மூச்­சுடன் செயற்­பட்டு வரு­கின்­றது என்­ப­தையும் இந்த இடத்தில் தெளி­வாக குறிப்­பி­டு­கின்றோம். அதா­வது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு தடையை ஏற்­ப­டுத்தி தேசிய நல்­லி­ணக்­கத்தை முறி­ய­டித்து நாட்டை அழிக்­கவே சில தரப்­பினர் முயற்­சித்து வரு­கின்­றனர்.

இதற்கு அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­காது. இது தொடர்பில் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து நாட்டை முன்­னேற்­று­வ­தற்கு நாங்கள் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம். இது­போன்ற அழிவை ஏற்­ப­டுத்தும் முயற்­சிக்கும் இன­வாத சக்­தி­களின் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கவேண்டாம் என அரசாங்கம் ஊடக துறையினரிடமும் கோரிக்கை விடுக்கின்றது.

நாட்டின் தற்போதைய நிலைமையை அறிந்து தேசிய பொறுப்புணர்வுடன் ஊடகங்கள் பணியாற்றவேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த இனவாத, மதவாத சக்திகள் நாட்டை அழிவுப்பாதையில் கொண்டுசெல்ல நாங்கள் இடமளிக்கமாட்டோம் என்றார்.  

நாட்டில் மத ரீதி­யா­க பதற்றத்தை ஏற்படுத்த பாரிய சதி முயற்சி. நாட்டில் மத ரீதி­யா­க பதற்றத்தை ஏற்படுத்த பாரிய சதி முயற்சி. Reviewed by Madawala News on 11/17/2016 10:29:00 AM Rating: 5