அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்குதல்.



அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது கலகம் அடக்கும் பொலிஸார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, அவ்வார்ப்பாட்டத்தை கலைத்துள்ளனர்.

ஜனாதிபதி  செயலயத்துக்கு முன்பாக, கொழும்பு-காலி வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே இவ்வாறு கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இராணுவ வீரர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக,  கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியில் உள்ள லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக, இன்றுக்காலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்குதல். அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்குதல். Reviewed by Madawala News on 11/07/2016 01:01:00 PM Rating: 5