Free Space

பிறந்தநாள் விழாவின் போது, விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை சுடுவோம் என மிரட்டிய போலீசார்.



யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக மாணவர் விடு­திக்குள் தங்­கி­யி­ருந்த மாண­வர் கள் சிலர் சக மாண­வனின் பிறந்த நாளைக் கொண்­டாட முற்­பட்டவேளை அத்­து­மீறி அங்கு நுழைந்த பொலிஸார் குறித்த நிகழ்வை நிறுத்­தி­ய­துடன்,மாண­வர்­களை சுடுவோம் என அச்­சு­றுத்­தி­யுள்­ள­தாக யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

 குறித்த சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது; யாழ்.பல்­க­லை­க­ழக பால­சிங்கம் ஆண்கள் விடு­தியில் தங்­கி­யி­ருந்த மாண­வர்கள்

தமது சக மாணவன் ஒரு­வ­ருக்கு நேற்று அதி­காலை பிறந்த நாள் வாழ்த்து தெரி­வித்து அவ­ரது பிறந்த நாளை கொண்­டா­டு­வ­தற்கு ஏனைய மாண­வர்­களை அழைத்­துக்­கொண்டு சென்­றுள்­ளனர். இதன்­போது சக மாண­வர்­க­ளது கத­வு­களை தட்டி எழுப்­பி­ய­வாறு கூட்­டிச்­சென்­றுள்­ளனர்.

 இதன்­போது தீடி­ரென மாணவர் விடு­திக்குள் துப்­பாக்­கி­க­ளுடன் நுழைந்த நான்கு பொலிஸார் குறித்த மாண­வர்­க­ளிடம் தமது 119 என்ற இலக்­கத்­திற்கு தொலை­பேசி அழைப்பு வந்­த­தா­கவும் இங்கு பிரச்­சனை இருப்­ப­தா­கவும் ஆகவே தாம் இது தொடர்­பாக விசா­ரணை நடாத்த வேண்டும் என கூறி­யுள்­ளனர்.

 இந்­நி­லையில் மாண­வர்கள் தம் விடுதி பொறுப்­பா­ளரை அழைத்து எப்­படி பொலிஸார் உள்ளே வந்­தார்கள் என வின­வி­ய­தற்கு பொலிஸார் எப்­படி உள்ளே வந்­தார்கள் என்­பது தனக்கு தெரி­யாது என விடுதி பொறுப்­பாளர் தெரி­வித்­துள்­ள­தாக மாண­வர்கள் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து மாண­வர்­களில் ஒருவர் அப்­ப­டி­யாயின் எப்­படி பொலிஸார் ஆயு­தங்­க­ளுடன் அனு­ம­தி­யின்றி பல்­க­லை­க­ழக மாணவர் விடு­திக்குள் நூழைய முடியும் என பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளிடம் வின­வி­யுள்­ளனர்.

இதன்­போது பொலிஸ் அதி­காரி ஒருவர் மாண­வர்­களை நோக்கி துப்­பாக்கி நீட்டி தொடர்ந்து பேசினால் சுடுவோம் என அச்­சு­றுத்­தி­ய­தா­கவும் அத்­துடன் கலை­பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட சிலரது முகவரிகள் மற்றும் ஏனைய தகவல்களை குறிப்பெடுத்துக்கொண்டு அரை மணிநேரம் அங்கிருந்துவிட்டு வெளியேறியதாகவும் பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் விழாவின் போது, விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை சுடுவோம் என மிரட்டிய போலீசார். பிறந்தநாள் விழாவின் போது, விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை சுடுவோம் என மிரட்டிய போலீசார். Reviewed by Madawala News on 11/24/2016 10:24:00 AM Rating: 5