Free Space

நாளை முதல் வாரமொரு அரசாங்க திருடன் அம்பலப்படுத்தப் படுவான். (Top 10 பட்டியலின் முதலாவது நபர் நாளை)



 
- முஜீப் இப்ராஹிம்- 
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஊழல் குற்றச்சாட்டில் அகப்பட்டுள்ள Top 10 அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிடப்போவதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

எப்படி ஆகிவிட்டது நிலமை?

"என்னைக்கள்வன் என்றால் உன்னைக்கள்வன் என்பேன்" என்ற இலங்கையின் அடிப்படை அரசியல் விழுமியங்களுக்கு இயைபாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இப்போதைய அரசாங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனையில் ஆறுபேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டதாக அப்பச்சியின் கோ(g)ளயாவும் ஏலவே FCID இல் ஏறி இறங்கி கொண்டிருப்பவருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிக்கிறார்.

நாளை நடைபெறவுள்ள பொது எதிரணி ஊடகமாநாட்டில் இந்த தகவல்களை வெளியிடப்போவதாகவும், நாளை Top 10 பட்டியலின் முதலாவது நபரை அடையாளப்படுத்துவதாகவும் பின்னர் வாரம் ஒருவர் என்ற அடிப்படையில் மிகுதி 9 பேரின் விபரங்களும் வெளியாகுமெனவும் அறியமுடிகிறது.

இந்த 10 பேர் தொடர்பான முறைப்பாடுகளை ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கும் , குற்றப்புலனாய்வு பிரிவிற்கும் கையளிக்க போவதாகவும் கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது!

திருடன் Vs திருடன் விளையாட்டு.

இன்னும் நான்குவருடங்களுக்கு இந்த சீரியல்தான் தேசத்தின் திரைகளில் ஓடப்போகிறது.
நாளை முதல் வாரமொரு அரசாங்க திருடன் அம்பலப்படுத்தப் படுவான். (Top 10 பட்டியலின் முதலாவது நபர் நாளை) நாளை முதல் வாரமொரு அரசாங்க திருடன் அம்பலப்படுத்தப் படுவான். (Top 10 பட்டியலின் முதலாவது நபர் நாளை) Reviewed by Madawala News on 11/08/2016 08:16:00 AM Rating: 5