Ad Space Available here

ட்ரம்ப் வருகையால் முஸ்லிம் உம்மத்துக்கு கிடைக்கும் நன்மைகளே அதிகம்.டிரம்ப் ஆட்சி ஏறி விட்டார் . பலவாறாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும் முஸ்லிம் உம்மா தன்னைத்தானே மீண்டும் அடையலாம் கண்டு கொள்ள உருவாகியுள்ள சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொள்ள முடியும் .

வரலாற்றில் நேர் மறையான சம்பவங்கள் சாதகமான சமுதாய மாற்றங்களை கொண்டுவந்துள்ளன ..

கர்வம் கொண்ட பிர் அவுனின் அட்டூழியங்கள், மூஸா ( அலை ) அவர்களை நபியாக அனுப்பப்பட
காரணமாக இருந்ததுடன் அடக்கப்பட்டிருந்த பனூ இஸ்ராயீல்களின் விடுதலைக்கும் , ஆணவம் கொண்ட  சாம்ராஜ்யம்  ஒன்றின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது .

அடக்குமுறைக்கும் அநீதிக்கும் உள்ளாக்கப்படும் சமூகத்துக்கு அல்லாஹு த ஆலாவின் உதவிகள் எப்போதும் இருந்து வந்துள்ளதை புனித அல் குர் ஆன் நமக்கு கற்றுத்தரும் போதனை . காலம் தாழ்த்தினாலும்  பொறுமையுடன் இறைவனை மட்டும் நம்பி உள்ள அவன் அடியார்களுக்கு இறுதியில் அவன் உதவி வந்து சேரும் என்பது வரலாறுகள் நெடுக நாம் கற்ற  படிப்பினைகள்.

மதவாதத்தையும் இனவாதத்தையும் வார்த்தைக்கு வார்த்தை வாந்தியாக கக்கும் அமெரிக்க குடியரசுவாத கட்சியின்     டொனால்ட் ட்ரம்ப் ,தேசியவாதம்,இனவாதம் ,மதவாதம்
என்ற பேரில் வெறுப்புணர்வுகளை விதைத்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் பெற்று ஜனாதிபதி ஆகி விட்டார் .

இஸ்லாத்தை நேரடியாக தாக்கி முஸ்லீம் விரோத போக்கை கையாளும் அவர் , அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கோடிஸ்வரர்களில் ஓருவர் . அகதிகளுக்கு எதிரான போக்கை, விசேடமாக சிரிய நாட்டு முஸ்லீம் அகதிகளுக்கு  எதிரான போக்கை கொண்டவர் .
தனது பணத்தாலும் ,வெறுப்புக்  கருத்துக்களாலும் அமெரிக்க ஜனாதிபதி ஆகி விடலாம் என்று கனவு கண்டார் இப்போது அந்த கனவை நனவாக்கியுள்ளார்

இவரது வியாபார சாம்ராஜ்ய பொறுப்பாளராக இருக்கிறன்றவரும் இவரது அரசியலின் வலது கையுமாக இவரது புதல்வி இவான்கா ட்ரம்பின் கணவர் நியூயோர்க் நகரத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன்
ஜாரெட் குஸ்னர், அவர் ஒரு யூதர் . கணவனின் யூத மதத்துக்கு மதம் மாறி அதனை பின்பற்றி வருகிறார் இவாங்கா . எனவே ட்ரம்பின் ஆட்சி யார் சார்பானதாக இருக்கும் என்று உத்தேசித்துக்கொள்ளுங்கள்.

தான் ஆட்சிக்கு வந்தால் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக மாற்றுவேன் என்று சவால் விட்டிருந்தார் ட்ரம்ப் . ஈராக்  யுத்தத்தால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவை மீட்க ஈராக்கில் உள்ள எண்ணெய் அனைத்தையும் பிடிங்கிக்கொள்ளப் போவதாகவும் கூறி இருந்தார் . முஸ்லீம்களை அடையாளம் கண்டு கொள்ள இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஹிட்லர் அணிவித்தது போல பகிரங்க  விசேட  அடையாள அட்டை அணிவிக்கப்பவோதாகவும்
கூறியிருந்தார்.
முஸ்லிம் நாடுகளில் இருந்து குடிவரவை தடுக்க போவதாக சூளுரைத்திருந்தார் .
இப்படி இஸ்லாமிய எதிர் போக்கு கொண்ட பல திடீர் அதிரடி அறிவிப்புக்கள்  தேர்தலுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தமை மக்கள் மத்தியில் பெரும் விளைச்சலை அவருக்கு அளித்துள்ளது .

ட்ரம்ப் ஜனாதிபதியாகி விட்டமையால் உம்மாவுக்கு பல நன்மைகள் கிடைக்கும் .

இதுவரை கடந்தகால அமெரிக்க ஜனாதிபதிகள்  வெளியே ஒன்றையும் உள்ளே இன்னொன்றையும்  கூறி
சமாதானம்  ,மனித உரிமை ,ஜனநாயகம்,  மேற்கத்திய பெறுமதிகள் ஏன் அணு , இரசாயன ஆயுதங்கள் என்ற பெயர்களில் முஸ்லீம்களையும் சர்வதேச  அரங்கையும் ஏமாற்றி வந்தனர் .ட்ரம்ப் நேரடியாகவே இஸ்லாமிய எதிர்ப்பு போக்கை கையாளுவதால் அவரின் ஒவ்வொரு காய் நகர்த்தல்களையும் கவனமாக
முஸ்லிம் நாடுகள் கையாள முடியும்

 சாத்தான்  வேதம் ஓதுவது போல பலஸ்தீன பிரச்சினையில் அமெரிக்காவை பல முஸ்லீம் நாடுகளும் ,சில பலஸ்தீன தலைவர்களும் நம்பத்தகுந்த நீதிபதியாக நம்பி வந்தனர் . இதனால் சமாதான பேச்சுவார்த்தைகள் என்ற பேரில் காலமும் நேரமும் வீணடிக்கப்பட்டது . பலஸ்தீன மக்களும்
உம்மாவும் இழந்ததெல்லாம் நேரத்தையும், காலத்தையும் உயிர்களையும் ,உடைமைகளையும் , நிலத்தையும்தான் ..

அமெரிக்காவில் பூதம் ஓன்று  ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை தமது ஆசனங்கள் பாதுகாக்கப்பட்டால் போதும் என்ற மத்திய கிழக்கில் உள்ள மன்னர்மார்களின் வேஷம் அந்நாட்டு
மக்கள் மத்தியில் எடுபடாமல் உள்ளதற்கு காரணம் தேசியவாதம் உள்ளங்களில் வேறூன்றி போய்விட்டமையே .  . உம்மாவுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை
அரபு மன்னர் ஆட்சிகளுக்கு
எதுவும் ஆகக்கூடாது என்ற நிலைக்கு முஸ்லீம் சமுகம் தள்ளப்பட்டுள்ளது . பிரித்து வைக்கப்பட்டு, தேசிய வாத ஆடை போத்தப்பட்டு, ஒன்றின் பின் ஒன்றாக வேட்டையாடப்பட்டு வருகிறோம்  ..

ட்ரம்ப் போன்ற ஓர் இனவாதி ,மதவாதி ஆட்சிக்கு வரும்போது பல   மார்க்க  அறிஞர்களின் கருத்துக்கள் எவ்வாறாக இருக்கின்றன என்பதை அறிய முடியும் .மேற்கின்  திருப்திக்காக  நடுநிலை வாதம் பேசும் பலர் அடையாளம் காணப்படுவார்கள் . இன்ஷா அல்லாஹ் ..

ட்ரம்ப் ஜனாதிபதியாகும் போது அமெரிக்க  முஸ்லீம்களின்  தேசிய வாதத்துக்கான வெகுமதிகளின் அர்த்தங்கள் உணரப்படும் .அது மாத்திரம் அன்றி தேசியவாதம் கொண்ட ஒவ்வொரு முஸ்லீமும்  இதன் அர்த்தத்தை உணர்ந்து கொள்வார்கள் .இன்ஷா அல்லாஹ் ..

சாம்பார் போல கலந்து களங்கி  கிடக்கிற சிரியா பிரச்சினையில் யார் பொது எதிரி என்கிற நிலைப்பாடு பல தரப்புக்களுக்கு இனிமேல்
புரிய வரும் . இன்ஷா அல்லாஹ் ..

சிரியாவில் பிரிந்து கிடைக்கும்   முஜாஹிதீன்களுக்கு பொது எதிரியோடு போராடும் நிலைக்கு  பிரச்சினை  வடிவமைக்கப்படும்.

அமெரிக்காவாவையும் அது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள
ஐ .நாவையும் நம்பி  பிரயோசனம் இல்லை நமது பிரச்சினையே நாமே தீர்க்க வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் உணர்ந்து கொள்ள ட்ரம்பின்  வருகை வழிவகுக்கும் .இன்ஷா அல்லாஹ் ..

முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நாடுகளில் உள்ள பல   மன்னர்கள், தலைவர்கள் , இமாம்கள் , மற்றும் சமூக தலைவர்கள்,கல்வி மான்கள்  வெளிப்படையாக  முனாபிக்குகளாக அல்லாஹ்வினால  அடையாளம் காட்டப்படுவார்கள்  இன்ஷா அல்லாஹ் .

உம்மா ,தொலைத்துவிட்டு  தேடித்திரியும் தனது அடையாளத்தை உணர்ந்து கொள்ளும் . மார்க்கத்தை ,அதன் கடமைகளை முறையாக பின்பற்றாத பல முஸ்லிம் பெயர்  தாங்கிகள்,  தம்மை உண்மையான முஸ்லீம்களாக மாற்றிக்கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ் ..

தொடர்ச்சியான எதிர்மறை பிரபலத்தால் இஸ்லாத்தில் என்ன உள்ளது என அறிய இஸ்லாத்தை கற்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் . இஸ்லாத்தை தழுவுவோர் தொகை உயர்வடையும் இன்ஷா அல்லாஹ் ..

வீட்டுக்கு   வீடாக வீதிக்கு  வீதியாக, ஊருக்கு ஊராக  பிரிந்து போய் கிடக்கும் நமக்கிடையே உள்ள பிணக்குகளை நாமே களைய முற்படுவோம்  .
இன்ஷா அல்லாஹ் ...

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ

அவர்களும் திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
(அல்குர்ஆன் : 3:54)

அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன் .

-முஹம்மது ராஜி
ட்ரம்ப் வருகையால் முஸ்லிம் உம்மத்துக்கு கிடைக்கும் நன்மைகளே அதிகம். ட்ரம்ப் வருகையால் முஸ்லிம் உம்மத்துக்கு  கிடைக்கும் நன்மைகளே அதிகம். Reviewed by Madawala News on 11/10/2016 03:18:00 PM Rating: 5