Accaddemy

கண்டி தர்மராஜ கல்லூரி மாணவன் காடையர்களால் தாக்கபட்ட சம்பவம்.. அமைச்சருக்கு கொண்டு செல்லப்பட்டது.



கண்டி தர்மராஜ கல்லூரியில் உயர் தர மாணவர் ஒருவரை இனந்தெரியாத சிலர் தாக்கி சம்பம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு அறிக்கையொன்றை பெற்று தருமாறு கூறி சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, காவற்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

4 மணித்தியாலங்களில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரத்நாயக்க, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த கல்லூரியின் மாணவனை இனந்தெரியாத சிலர் தாக்கிய காணொளி நேற்று (22) சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் அந்த கல்லூரியில் 13 ஆம் தரத்தில் கற்கும் மாணவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்து பிற்பகல் 1.40 மணியளவில் வெளியே வந்த குறித்த மாணவனை காடையர்கள்  சிலர் தாக்கியுள்ளமை அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

பாடசாலையில் 12 ஆம் தர மாணவ தலைவர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளான மாணவனை, பாடசாலைக்கு உகந்த முறையில் முடியை திருத்தி வருமாறு சம்பவம் இடம்பெற்ற காலையில் கூறப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் குறித்த இருவருக்கும் இடையே வாக்கு வாதம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த மாணவன் தாக்குதலுக்கு உள்ளானது அன்றைய தினம் பிற்பகல் ஆகும் எனவும்,

 இன்று காலை கண்டி காவற்துறை அதிகாரிகள் சிலர் கல்லூரிக்கு வந்ததாகவும் தர்மராஜ கல்லூரியின் அதிபர் தம்பிய வனசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி: http://www.madawalanews.com/2016/11/video_23.html
கண்டி தர்மராஜ கல்லூரி மாணவன் காடையர்களால் தாக்கபட்ட சம்பவம்.. அமைச்சருக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்டி தர்மராஜ கல்லூரி மாணவன் காடையர்களால் தாக்கபட்ட சம்பவம்.. அமைச்சருக்கு கொண்டு செல்லப்பட்டது. Reviewed by Madawala News on 11/23/2016 02:28:00 PM Rating: 5