Kidny

Kidny

முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த ரஊப் ஹக்கீம் மேற்கொண்ட கள்ளத்தனமான முயற்சியே இது..முஸ்லிம் திருமண சட்டத்தில் அரசு கைவைக்க அனுமதித்தால் அது எதிர் காலத்தில் முஸ்லிம்களின் பல சட்டங்களில் அரசு கைவைக்க இலகுவாக வழியேற்படுவதோடு ஆயிரத்துக்கு மேற்பட்ட வருடங்களாக முஸ்லிம்களால் பின்பற்றப்படும் இஸ்லாமிய சட்டங்கள் பிற்போக்கானவை என முஸ்லிம்களே ஏற்றுக்கொண்டதாக ஆகும் என்பதன் அடிப்படையிலேயே உலமா கட்சி இதனை கடுமையாக எதிர்க்கிறது என அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.


இது பற்றி ஊடகவியலாளரின் கேள்விக்கு அவர் பதில் தருகையில் மேலும் தெரிவித்ததாவது,


முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் என்பதை கடந்த அரசில் நீதி அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மேற்கொண்ட கள்ளத்தனமான முயற்சியே இது என்பதை அவர் கல்முiயில் நடைபெற்ற விழாவொன்றில் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளதன் மூலம் தெரிகிறது. முடிந்த வரை தான் நீதி அமைச்சராக இருக்கும் காலத்தில் இந்த திருத்தங்களை முடித்தாக வேண்டும் என தான் மற்றவர்களுக்கு பணித்ததாகவும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் இந்த சமூக துரோகத்துக்கு காரணமாக இவரே இருந்துள்ளார் என்ற எமது குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது.


அமைச்சர் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த போது முஸ்லிம் சமூகத்துக்கென எந்த நன்மையையும் செய்யாமல் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் என்ற படுபாதக செயலையே செய்துள்ளார். இதன் மூலம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் இன்றைய அரசு கைவைப்பதற்குரிய துரோகத்துக்கு இவரே காரணமாகியுள்ளார். ஒரு முஸ்லிம் கட்சித்தலைவர் இதனை செய்திருப்பது மிகப்பெரிய துரோகமாகும்.


இன்று நாடும் நாட்டு முஸ்லிம்களும் எதிர் நோக்கும் அடிப்படை பிரச்சினை என்பது முஸ்லிம் தனியார் சட்டமா என கேட்கின்றோம். முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 16 என திருத்த வேண்டும் என ரஊப் ஹக்கீம் கூறியுள்ளமை அவரது இஸ்லாமிய அறிவின் குறைவை காட்டுகிறது. முஸ்லிம் பெண்ணின் திருமண வயது என்பது 13 என இலங்கை முஸ்லிம் சட்டத்தில் குறிப்பிட்டிருந்தாலும் அந்த வயதில் அவளுக்கு கட்டாயம் திருமணம் செய்விக்கத்தான் வேண்டும் என சொல்லவில்லை.


மாறாக 13 வயதோ 18 வயதோ அல்லது 30 வயதோ எந்த வயதில் என்றாலும் பெண்ணின் திருமணத்க்கு அவளது தந்தை அல்லது பாதுகாவலரின் அனுமதி கட்டாயம் தேவை என இஸ்லாம் சொல்கிறது. இன்றைய காலத்தில் பெரும் பாலான முஸ்லிம் பெண்கள் பாடசாலை கல்வியை முடிப்பதற்குள் 18 வயதை அடைந்து விடுகின்றனர் என்பதால் இளவயது திருமணங்கள் முற்றாக அருகி விட்டன. இந்த நிலையில் இந்த வயதை திருத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இஸ்லாத்தின் சட்டங்கள் இறைவனின் சட்டமாகும். அது எல்லோருக்கும் எக்காலத்துக்கும் ஏற்றதாகும்.


இப்போதெல்லாம் பெண்கள் புரய்லர் கோழி போன்று பத்து வயதில் பருவமடைகிறார்கள். அத்துடன் கலவன் பாடசாலை, செல் போன்கள் போன்ற காரணங்களால் நட்பு, காதல் என்பன அதிகரித்து விட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம். பிற சமூகங்களில் 14, 15 வயது பெண்கள் காதலில் வீழ்ந்து ஓடிச்சென்று 18 வயது வரை குடும்பம் நடாத்தி பிள்ளையும் பெற்று விட்டு   18 வயதில் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதை காண்கிறோம். சில பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழில் பெற்றோர் விவாகம் செய்துள்ளனரா என்ற கேள்விக்கு இல்லை என்றும் குறிப்பிடப்படுகிறது என்பது நீதி அமைச்சராக இருந்தவருக்கு தெரியாதா? இவ்வாறு பெண் 15 வயதில் பிள்ளை பெறும் போது அவள் சட்டப்படி திருமணம் செய்ய முடியாது என்பதால் இவ்வாறு ஹறாமான பிள்ளையை பெற்றெடுக்கிறார்கள். இப்படியொரு நிலைமை முஸ்லிம் சமூகத்தில் லட்சத்தில் ஒருவருக்காவது ஏற்பட்டால் அதற்கும் தீர்வை இறை மார்க்கம் தருவதற்காகவே பெண்ணின் திருமண வயதை பருவமடைதல் என குறிப்பிட்டுள்ளது.


அத்துடன் மருத்துவ ரீதியாக இளம் பெண்கள் குழந்தை பெறுவது என்பது ஆபத்தானது என்பதை விட முதிர் கண்ணிகள் பி;ள்ளை பெறுவதே ஆபத்தானதாக உள்ளது என்பதை ஹக்கீம் போன்றவர்கள் வைத்தியசாலை ஆதாரங்களை வைத்து படித்துணர வேண்டும். அண்மைக்காலமாக இருபது வயதுக்கு  பின் திருமண முடித்த அனேக பெண்கள் சீசர் முறையிலேயே குழந்தையை பெற்றுக்கொள்கிறார்கள் என்பதே உண்மை. இளவயது திருணம் ஆபத்தானது எனில் முதிர் வயதுப்பெண்கள் மிக இலகுவாக குழந்தையை பெற வேண்டுமல்லவா?

நமது மனித வரலாற்றை, குறிப்பாக முஸ்லிம்களின் வரலாற்றை பார்க்கும் போது நமது மூதாதையர்கள் பலர் மிக இளம் வயதிலேயே திருமணம் முடித்து பத்துக்கு மேற்பட்ட குழந்தைகளையும் இயற்கையாக பெற்றுள்ளார்கள். இதனை அறிய வேண்டுமாயின் இன்று ஐம்பது வயதுக்கு மேற்பட்டோரின் குடும்ப விபரத்தை பெற்று அறிந்து கொள்ளலாம்.

ஆக இது விடயம் அவரவர் அறிவுக்கேற்றவாறே விவாதிக்கப்படுவதால் இவற்றை நாம் சொல்கிறோம். எது எப்படியிருப்பினும் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பது இனவாதிகளினதும் சியோனிசத்தினதும் முயற்சியாகும். இதன் மூலம் இறை சட்டங்கள் காலத்துக்கு ஒவ்வாதது என்பதை நிரூபிக்க பார்க்கிறார்கள். இதற்கு நாம் இடமளித்தால் எதிர் காலத்தில் இஸ்லாமிய சட்டங்கள் காலத்துக்கு ஒவ்வாதவை என ஹக்கீம் போன்ற முஸ்லிம் சமூகப்பற்றற்றவர்களால் பேச வைக்கப்பட்டு அவை நீக்கப்படும் சாத்தியம் உள்ளது. அப்போது இந்த வயதுத்திருத்தம் நடந்ததை உதாரணமாகவும் காட்டுவர்.

அத்துடன் ரஊப் ஹக்கீம் சொல்வது போன்று காழியார்களாக பெண்களையும் நியமித்தால் இது இறை சட்டத்தை அவமதிப்பதுடன் நாளை பள்ளிவாயல் இமாம்களாக பெண்களை நியமிக்க வேண்டும் என்ற கோமானித்தனமான கோரிக்கைகளுக்கும் இது வழி வகுக்கும். இவையெல்லாம் ஆணாதிக்க சிந்தனை என்பது இஸ்லாம் பற்றிய அறிவற்றவர்களின் கருத்தாகும். மாறாக ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் சொல்கிறது. இஸ்லாத்தில் ஆணை விட மும்மடங்கு தாய் எனும் பெண்ணுக்கு இஸ்லாம்  சிறப்பை வழங்கியுள்ளது.


மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இது விடயம் நடக்காமைக்கு பிரதான காரணம் உலமா கட்சியின் கடும் எதிர்ப்பாகும். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ  இனவாதியாக இருந்திருந்தால் ஒரே நாளில் இச்சட்டத்தை மாற்றியிருப்பார். அவர் அப்படி செய்யவில்லை.

ஆனால் இன்று சிறுபான்மை மக்க்களால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் இத்தகைய இனவாத செயற்பாட்டில் மும்முரமாக நிற்பதுடன் முஸ்லிம்களின் அதிக வாக்குகளை பெற்ற முஸ்லிம் காங்கிரசும் அரசுக்கு விலை போயுள்ளது.


ஆகவே முஸ்லிம் திருமண சட்டத்தில் அரசோ, முஸ்லிம் அமைச்சர்களோ யாருமோ கைவைக்க இடமளிக்க முடியாது என்பதை உலமா கட்சி ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறது என மௌலவி முபாறக் தெரிவித்தார்.
முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த ரஊப் ஹக்கீம் மேற்கொண்ட கள்ளத்தனமான முயற்சியே இது.. முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த ரஊப் ஹக்கீம் மேற்கொண்ட கள்ளத்தனமான முயற்சியே இது.. Reviewed by Madawala News on 11/15/2016 02:36:00 PM Rating: 5