Free Space

நேற்றிரவு இடம்பெற்ற உலப்பனை சம்பவமும், தீயாக பரப்பப்பட்ட வதந்திகளும்.. ( நடந்தது இதுதான்)



நேற்று இரவு உலப்பனையில் என்ன பிரச்சினை? கடைகள் நெருப்பு வைக்கபட்டதா ? ஏன் இதுவரை அதுபற்றி செய்தி பிரசுரிக்கவில்லை? என்ற தொனியில் இன்று காலை பலர் எம்மையும் அதேவேளை பிரதேச மக்களையும் தொடபு கொண்டு கேட்ட வண்ணம் உள்ளனர். உண்மையில் அங்கு அதுபோன்ற எவ்வித அசம்பாவிதமுயம் ஏற்படவில்லை. சுமுகமாக முடிந்த சிறு பிரச்சினை ஒன்றை பிரசுரித்து மக்களை பதட்டமடைய வைக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இதுபற்றி நாம் பிரசுரிக்கவில்லை. ஆனால் பலரும் இது தொடர்பில் தொடர்ந்து கேட்டு வருவதால் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த உலப்பனை சகோ. சப்ரானை தொடர்புகொண்டு  நடந்த சம்பவத்தை கீழே தருகிறோம்.

நேற்று மாலை  உலப்பனையில்  முஸ்லிம் நபர் ஒருவரின் முச்சக்கரவண்டியில் சென்ற பெரும்பான்மை இனத்தார்கள் சிலருக்கும் சாரதிக்கும் ஏற்பட்ட சிறு கைகலப்பை அடுத்து  பிரதேசத்தில் இருந்த சில பெரும்பான்மையினர் நேற்று இரவு வேளையில் மற்றும் சிலரையும் இணைத்துக்கொண்டு வந்து உலப்பனை டவுனில் சத்தமிட்டு உள்ளனர். முஸ்லிம்களுக்கு ஏசிய படி  கடைகளை உடைப்போம்,  பற்ற வைப்போம், நொறுக்குவோம் . எல்லாரும் இப்போ கடைகளை மூடிட்டு செல்லனும் என்ற தொனிகளில் சத்தமிட்டு சில கற்களையும் கட்டிடங்களுக்கு  உள்ளனர்.

இரவானதால்  ஏற்கனவே பலர்  கடைகளை  மூடியே இருந்துள்ளார். உடனடியோக பொலிசாருக்கு இதுபற்றி பிரதேசவாசிகள் தெரிவித்தவுடன் அவர்களும் களத்துக்கு வந்து அங்கிருந்தவர்களை டவுனில் இருந்து விரட்டி விட்டுள்ளனர்.

அங்கிருந்து சென்ற சிலர்  உலப்பனை கொலனி பிரதேசத்துக்கு சென்று அங்கும் சில இடங்களுக்கு கற்களை வீச, போலீசார் உடனடியாக அப்பிரதேசத்துக்கு செல்லும் போது அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இப்பிரச்சினையை சுமுகமாக தீர்க்க பள்ளி நிர்வாக உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகேவிடம் இதனை தெரிவிக்க உடனடியாக அவரும் சம்பவ இடத்துக்கு வந்து, அங்கிருந்த சிலரும் இணைந்து பிரதேச விகாரைக்கு சென்று விகாராதிபதி தேரரிடம் விஷயத்தை சொல்லி உள்ளனர்.

அவர் அங்கிருந்த பெரும்பான்மை சிலரை அழைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரகளை அழைத்து வர வைத்து . என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். அவர்களும் குறிப்பிட்ட சம்பவத்தை தொடர்ந்து நாம் டவுனில் சத்தமிட்டது உண்மைதான். என கூறி விகாராதிபதி தேரரிடம் மன்னிப்பும் கேட்டு அங்கிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் பா.உறுப்பினருடன்  கதைத்து விட்டு சுமுகமாக சென்றுள்ளனர்.

நடந்தது இதுதான்... அதான் ஆனால் காலையில் சில முகநூல் மற்றும் வாட்சப் குழுக்களில் அசம்பாவிதம், ஏற்பட்டது சில கடைகள் தீக்கிரை என்ற ரேஞ்சில் செய்திகளை பரப்பி உள்ளனர். அதனை தொடர்ந்து எம்மிடமும், பிரதேசவசிகளிடமும் பலர் தொடர்பு கொண்டதால் தான். நடந்த சம்பவத்தை இங்கு பிரசுரிக்கிறோம்.

நேற்றிரவு இடம்பெற்ற உலப்பனை சம்பவமும், தீயாக பரப்பப்பட்ட வதந்திகளும்.. ( நடந்தது இதுதான்) நேற்றிரவு இடம்பெற்ற உலப்பனை சம்பவமும், தீயாக பரப்பப்பட்ட வதந்திகளும்.. ( நடந்தது இதுதான்) Reviewed by Madawala News on 11/21/2016 08:35:00 AM Rating: 5