Free Space

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தும் எந்த தேவையும் எமக்கு இல்லை.



ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தும் எந்த தேவையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் எந்த பேச்சுவார்த்தையையும நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா நேற்று குற்றம் சுமத்தியிருந்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தயா கமகே இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பசில் ராஜபக்சவின் பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவலை ஒரு மாதத்திற்குள் வெளியிடவுள்ளதாக டிலான் பெரேரா குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தும் எந்த தேவையும் எமக்கு இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தும் எந்த தேவையும் எமக்கு  இல்லை. Reviewed by Madawala News on 11/26/2016 01:06:00 PM Rating: 5