நாளை அமேரிக்க ஜனாதிபதி தேர்தல்... நெருக்கமான போட்டியில் முன்னுக்கு வரும் ட்ரம்ப்.. என்ன நடக்கும்?



-Zafar Ahmed-

கடைசி நேர பரபரப்பில் இருக்கிறது அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் களம்..

நாளை உலக பொலிஸ்காரன் அல்லது பணக்காரப் பொறுக்கி என்று அழைக்கப்படும் தேசத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மீடியாக்கள் எல்லாம் அமெரிக்கா நகரங்களில் திருவிழா கோலம் பூண்டு இருக்கின்றன..

வீதியில் போவோர் , வருவோரை எல்லாம் கூப்பிட்டு யாருக்கு ஓட்டு என்று சல்லடையாய் துளைத்து எடுக்கிறது மீடியா..

அமெரிக்காவில் இருக்கும் தமிழ் பேசும் மக்களின் ஒட்டு மொத்த தெரிவாக ஹிலாரி கிளிண்டன் இருக்கும் நிலையில் ஒரு சில இந்துத்துவா அமைப்புக்கள் ட்ரம்பை ஆதரிக்கப் போவதாய் கூறுகின்றன..

அமெரிக்கா வாழ் கருப்பு இனத்தவர்கள், முஸ்லிம்கள் , இதர சிறுபான்மையினர் ட்ரம்பை விட்டு எப்போதோ தலை தெறிக்க ஓடி விட்டனர்.

அதிரடி மன்னனும் ஓட்டை வாய் சிகரமுமான ட்ரம்ப் ஆரம்பத்தில் இந்த மரதன் ரேஸில் பின் தங்கி இருந்தாலும் தற்போது நெருக்கமான போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன..


கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு எந்தவிதத்திலும் சளைத்தது அல்ல இந்த அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல்.அந்த அளவுக்கு சேறு பூசுதல்களும், வசைபாடல்களாலும் பல்கிப் பெருக அமெரிக்காவின் இமேஜ்??? பாதாளத்தில் போய் படுத்துவிட்டது..

ஹிலாரி வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாகவும், ட்ரம்ப் வென்றால் ஒரு வேளை அமெரிக்காவின் கடைசி ஜனாதிபதியாகவும் இருக்கக்கூடும் :)

ஹிலாரி தெரிந்த பிசாசு..நன்கு அறியப்பட்ட ஜீவன்..அமெரிக்கான்னா இப்படித்தான் இருக்கும்னு ஏற்கனவே கண்டு புளிச்சிப் போன முகம்..
ஆனால் ட்ரம்ப் புரியாத வஸ்து..

அது என்ன செய்யும் எப்படிச் செய்யும்னு யாருக்கும் தெரியாது...பார்ப்போம் 9 ஆம் தேதி விடிந்ததும் ரிசல்ட் தெரிந்துவிடும்..

ஆனால் உலகில் ஏதோ ஒரு நாட்டின் விடியலுக்கு சம்மட்டி அடிக்கப்படும்..

-Zafar Ahmed-

நாளை அமேரிக்க ஜனாதிபதி தேர்தல்... நெருக்கமான போட்டியில் முன்னுக்கு வரும் ட்ரம்ப்.. என்ன நடக்கும்? நாளை அமேரிக்க ஜனாதிபதி தேர்தல்... நெருக்கமான போட்டியில் முன்னுக்கு வரும் ட்ரம்ப்.. என்ன நடக்கும்? Reviewed by Madawala News on 11/07/2016 01:16:00 PM Rating: 5