Ad Space Available here

(Video) காபூல் பள்ளிவாசலில் தற்கொலைப்படை தாக்குதல்: 27 பேர் பலி. 35 பேர் காயம்.



அபூஸாலி முஹம்மத் சுல்பிககார் 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ளபள்ளிவாசல்   ஒன்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்  நிகழ்த்தப்பட்டது. இந்த வெடி குண்டு தாக்குதலில் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய 27 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெடி குண்டு வெடித்த போது, நிலநடுக்கம் ஏற்பட்டது போல அதிர்ந்ததாகவும் பலத்த சத்தத்துடன் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதாகவும், என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியதாகவும் தப்பி பிழைத்த ஒருவர் அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டு துவக்கத்தில்  பள்ளிவாசல் ஒன்றில் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பெற்றது. இன்று நடைபெற்ற தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

(Video) காபூல் பள்ளிவாசலில் தற்கொலைப்படை தாக்குதல்: 27 பேர் பலி. 35 பேர் காயம். (Video) காபூல் பள்ளிவாசலில்  தற்கொலைப்படை தாக்குதல்: 27 பேர் பலி. 35 பேர் காயம். Reviewed by Madawala News on 11/21/2016 08:55:00 PM Rating: 5