(Video) குருநாகலில் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்.. ஒரு போலிஸ் அதிகாரி பலி.



குருநாகல் மாபோத பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில்  உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ..

(Video) குருநாகலில் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்.. ஒரு போலிஸ் அதிகாரி பலி. (Video) குருநாகலில்  பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்.. ஒரு போலிஸ் அதிகாரி பலி. Reviewed by Madawala News on 11/16/2016 08:14:00 AM Rating: 5