Free Space

( Video இணைப்பு) ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற அரச கொள்ளைகள். போட்டுத்தாக்கும் மைத்திரி.



கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிற்கு முதல் நாளான 7ஆம் திகதி மாத்தறை நில்வளா திட்டத்தின் சார்பில் ரூபா 3,012 மில்லியன் காசோலை வெளியிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

காலியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த பணத்திற்கு என்ன ஆயிற்று என்பது தொடர்பில் இதுவரையிலும் தெரியவில்லை என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

நில்வளா திட்டத்தின் ஊடாக 2012 ஆம் ஆண்டு சீன நிறுவனம் என்ற பெயரில் ரூபா 1000 மில்லியன் வெளியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்,நில்வளா திட்டத்தின் பெயரில் ரூபா 3,012 மில்லியன் வெளியிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் எவ்வாறு நிதி அமைச்சு இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டிருக்கும் என மைத்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் எவ்வாறு அமைச்சுக்களினால் காசோலை எழுதுதல் போன்ற பரிவர்தனை செயற்பாடுகள் நடந்தன என ஜனாதிபதி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன் இது சந்தேகத்திற்கிடமான பரிமாற்றங்களாக இல்லாவிட்டாலும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

( Video இணைப்பு) ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற அரச கொள்ளைகள். போட்டுத்தாக்கும் மைத்திரி. ( Video இணைப்பு) ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற அரச கொள்ளைகள். போட்டுத்தாக்கும் மைத்திரி. Reviewed by Madawala News on 11/28/2016 04:07:00 PM Rating: 5