Free Space

Video இணைப்பு.. நானும் நாளை ஒரு கட்சியை உருவாக்கலாம். அதற்கு தலைவராகலாம். அது என் விருப்பம்.



ஒரு கட்சியை உருவாக்குவதும், அந்த கட்சிக்கு தலைமை தாங்குவதும் அவரவருடைய விருப்பம், அதில் யாரும் தலையிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ்ஸை பார்வையிடுவதற்காக நேற்று மாலை மஹிந்த சிறைச்சாலை சென்றிருந்தார்.

இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

200 மில்லியன் ரூபாய் பணத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு டிரான் அலஸ் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதை விடவும் பாரிய ஊழல் மோசடிகள் மத்திய வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதை செய்த மாபெரும் திருடர்கள் வெளியில் சுதந்திரமாக அழைகின்றார்கள். இதற்கு காரணம் தற்போதைய பொலிஸ் அதிகாரமும், சட்டமும் ஒவ்வொரு நபர்களுக்கும் ஏற்ற வகையில் வலைத்துக்கொள்ளக் கூடியதாக உள்ளது.

ஸ்திரமற்ற ஒரு நிலையிலேயே இன்றைய சட்டமும், பொலிஸூம் காணப்படுவதாக குற்றம் சுமத்தினார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனான செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மஹிந்த,

எமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக தெரியவருகின்றது.

கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விருப்பம் தெரிவிக்குமானால் அதற்கு நாம் ஒருபோதும் தடை விதிக்க மாட்டோம். அவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.

எனினும், கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய பிரமுகரே ஜீ.எல்.பீரிஸ், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் என்ற கூற்றுக்கு தங்கள் பதில் என்ன என்றும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஒரு மனிதருக்கு கட்சியை உருவாக்குவதற்கும், அந்த கட்சிக்கு தலைமை தாங்குவதற்கும் இந்த நாட்டில் உரிமை உண்டு. அதற்கும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என பதிலளித்தார்.

“நானும் நாளை ஒரு கட்சியை உருவாக்கலாம். அதற்கு தலைவராகலாம். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்தவன், ஆகவே என்னாலும் புதிய கட்சியை உருவாக்கி அதன் தலைவராகலாம்” எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மேலும், ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி கட்சியின் சின்னமாக வெண்தாமரை மொட்டு என தெரிவித்து தேர்தல் ஆணைக்குழுவில் பதிவுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ..

Video இணைப்பு.. நானும் நாளை ஒரு கட்சியை உருவாக்கலாம். அதற்கு தலைவராகலாம். அது என் விருப்பம். Video இணைப்பு.. நானும் நாளை ஒரு கட்சியை உருவாக்கலாம். அதற்கு தலைவராகலாம். அது என் விருப்பம். Reviewed by Madawala News on 11/03/2016 10:58:00 AM Rating: 5