பேஸ்புக் வழங்கும் எக்ஸ்பிரஸ் WiFi இன்டர்நெட்.



பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், அதன் பயனாளர்களுக்கு வைஃபை சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

பேஸ்புக் உலகம் முழுவதும் உள்ள அதன் பயனர்களுக்கு ‘எக்ஸ்பிரஸ் வைஃபை’ எனும் புதிய திட்டத்தை தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இணைய சேவை இல்லாத பல கிராமங்களில் உள்ள பயனர்கள் இணைய வசதியை பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

பேஸ்புக் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் இணைய இணைப்பை அதிகரிக்க இந்த எக்ஸ்பிரஸ் வைஃபை சேவையை பறக்கும் விமானங்களில் ‘லேசர் ட்ரான்ஸ்’ என்ற தொழில்நுட்பம் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

 ‘எக்ஸ்பிரஸ் வைஃபை’ அறிமுகப்படுத்தப்பட்டால், பேஸ்புக்கின் இதற்கான பிரத்யேக அப்ளிகேஷன் மூலம் வைஃபை வசதியை எளிதாக பெறமுடியும் என்று பேஸ்புக் குறிப்பிட்டிருக்கிறது.
பேஸ்புக் வழங்கும் எக்ஸ்பிரஸ் WiFi இன்டர்நெட். பேஸ்புக் வழங்கும் எக்ஸ்பிரஸ் WiFi  இன்டர்நெட். Reviewed by Madawala News on 11/28/2016 02:31:00 PM Rating: 5