tg

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக இன்று (01) கடமையேற்பு

- யூ. கே. காலித்தீன் -

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக முன்னால் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்  ஏ.எல்.எம். சலீம் இன்று (01) தனது பதவிப் பிரமாணத்தை, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜக்கத் பி விஜேயவீர முன்னிலையில் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் விஜித செனவிரத்ன, சிரேஸ்ட உதவிச் செயலாளர் நிசாந்த வீரசிங்க, திவிநெக்கும திட்டமிடல் பணிப்பாளர் எம்.ரி. வஹாப்தீன், திவிநெக்கும திட்டமிடல் உதவிப்  பணிப்பாளர் ஐ. அலியார், சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர்கள் உட்பட குடும்பத்தினரையும் படத்தில் காணலாம்.

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக இன்று (01) கடமையேற்பு சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக இன்று (01) கடமையேற்பு Reviewed by Madawala News on 12/01/2016 01:42:00 PM Rating: 5