Accaddemy

டொனால்டு டிரம்புடன் இணைந்து இரவு விருந்து சாப்பிட ரூ.7 கோடி கட்டணம்...


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
அமெரிக்காவின் புதிய  ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்புடன், சேர்ந்து இரவு விருந்து சாப்பிட, ஏழு கோடி ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதிதேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், 70, வெற்றி பெற்றார்; 2017 ஜனவரி 20ல், அவர் பதவி ஏற்க உள்ளார். புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அவர் ஈடுபட்டு உள்ளார். தன் அரசில் புதிய நிதியமைச்சராக, பிரபல வங்கி அதிகாரி ஸ்டீவ் முனிச்சினை நியமிக்கபோவதாக, டிரம்ப் அறிவித்துள்ளார்.

பதவியேற்பு விழா ஏற்பாடுகள், தற்போது நடந்து வருகின்றன. அங்கு,  ஜனாதிபதி பதவியேற்பு விழா, அரசு செலவில் நடப்பது இல்லை. அதற்கு பதிலாக, தனிநபர்கள் மற்றும் அறகட்டளையிடம் இருந்து பெறப்படும் நன்கொடை மூலம், மிக பிரம்மாண்டமாக விழா நடத்துவது வழக்கம். இதற்காக, பதவியேற்பு விழா கமிட்டி, நிதி திரட்ட துவங்கியுள்ளது. பதவியேற்பு விழாவிற்கு பின், புதிய ஜனாதிபதி  டிரம்புடன் சேர்ந்து, இரவு விருந்து சாப்பிட, ஏழு கோடி ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதுபோலவே, துணைஜனாதிபதி , மற்ற அமைச்சர்கள் உள்ளிட்டோருடன், சேர்ந்து, இரவு உணவு சாப்பிட, 20 லட்சம் ரூபாய் முதல், ஏழு கோடி ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டொனால்டு டிரம்புடன் இணைந்து இரவு விருந்து சாப்பிட ரூ.7 கோடி கட்டணம்... டொனால்டு டிரம்புடன் இணைந்து இரவு விருந்து சாப்பிட  ரூ.7 கோடி கட்டணம்... Reviewed by Madawala News on 12/01/2016 09:55:00 PM Rating: 5