Accaddemy

டொனால்ட் ட்ரம்ப் இன் வரிகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கும்?



புதிய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் ட்ரம்பின் வரியை சமாளிக்க என்ன செய்யப் போகிறது என ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வரவு–செலவுத்திட்டத்தின் வெளிவிவகார, தொழிலுறவு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சுக்களின் செலவின தலைப்பின் குழுநிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்;

அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் உற்பத்திகளுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இது பாரதூரமானது. எனவே அரசாங்கம் ட்ரம்பின் வரிக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளதா? ஆகவே பாரிய சிக்கலுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக வேண்டும்.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்யிட் அல் ஹுசைனைக் கூட விரட்டவுள்ளார். இதன்படி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அமெரிக்கா கூட, ஹுசைனை எதிர்க்கத் தொடங்கியுள்ளது.

இதேவேளை ஜி.எஸ்.பி.ப்ளஸ் வரிச்சலுகை விரைவாக கிடைக்கும் என அறிவித்த போதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

எனவே அரசாங்கத்திடம் எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை என்றார்.
டொனால்ட் ட்ரம்ப் இன் வரிகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கும்? டொனால்ட் ட்ரம்ப் இன் வரிகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கும்? Reviewed by Madawala News on 12/01/2016 10:18:00 AM Rating: 5