Free Space

கோத்தபாய ராஜபக்ச இன்று கைது செய்யப்பட வாய்ய்புகள் அதிகம்.



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று கைது செய்யப்படலாம் என சிங்கள ஊடகங்கள்  தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தபாயவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ள எவன்கார்ட் வழக்கு விசாரணை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற எவன்கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றில் அனைத்து ஆவணங்களும் சாட்சியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எவன்கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், நீதிமன்றில் இன்று ஆஜராகும் கோத்தபாயவிடம் விளக்கம் கோரப்படவுள்ளது.

இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நடைபெற்ற போது கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர். இதன்போது சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் உத்தரவிடப்பட்ட நிலையில், சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இன்றைய தினம் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.




கோத்தபாய ராஜபக்ச இன்று கைது செய்யப்பட வாய்ய்புகள் அதிகம். கோத்தபாய ராஜபக்ச இன்று கைது செய்யப்பட வாய்ய்புகள் அதிகம். Reviewed by Madawala News on 12/01/2016 10:06:00 AM Rating: 5