Accaddemy

(படங்கள்) கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி அதிபர் சிஹாரா ரஹீம் பதவி நீக்கம் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்.



 மாணவிகளுக்கு  சீருடை விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி ஒன்றை குற்றம் சாட்டி கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி அதிபர் சிஹாரா ரஹீமுக்கு  தற்காலிக  பதவி நீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இன்று காலை அவருக்கு ஆதரவாக பாடசாலை மாணவிகளின்  பெற்றோர் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

"எமது அதிபர் எமக்கு வேண்டும்"
"விசாரணைக்கு முன்னரே குற்றவாளியா"
"Justice For Principal"
"எமது வேலையை இலகுவாக்கிய அதிபரை பதவி நீக்கம் செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம்" போன்ற பதாகைகளை பெற்றோர் ஏந்தியபடி ஆர்பாட்டத்தை மேற்கொள்கின்றனர்.

மாணவர்களுக்கு வழங்கபடும் பாடசாலை  சீருடை விநியோக வவுச்சர்களுக்கு பதிலாக,  சலுசல அரச  நிறுவனத்தில் சீருடைத்துணியை வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு காணப்படுவதாலே இவர் பதவி நீக்கம் செய்யபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை மாணவர்களுக்கு வழங்கபடும் பாடசாலை  சீருடை விநியோக வவுச்சர்களை நேரடி வவுச்சராகவே வழங்க வேண்டும் என்ற சுற்றுநிருபம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

( படங்கள்) Fareeza Sajeeth & mohamed sham






 
 
 
 
(படங்கள்) கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி அதிபர் சிஹாரா ரஹீம் பதவி நீக்கம் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம். (படங்கள்) கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி அதிபர் சிஹாரா ரஹீம் பதவி நீக்கம் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம். Reviewed by Madawala News on 12/02/2016 08:50:00 AM Rating: 5