Accaddemy

அல் குர்ஆனுக்கு ஞானசார தேரர் விளக்கம் கோரியிருப்பது இனவாத முயற்சிக்கான ஏற்பாடாகும்.



-ARA.Fareel-

முஸ்­லிம்­களின் நிம்­ம­தியைக் குலைப்­ப­தற்கும் பொரு­ளா­தா­ரத்தை அழிப்­ப­தற்கும் மீண்டும் ஒரு கல­வ­ரத்தை உரு­வாக்­கு­வ­தற்குமாகவே பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் உலமா சபை­யிடம் விளக்­கங்­களைக் கோரி­யுள்ளார்.

இவற்றை உலமா சபை கவ­னத்­திற்­கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துதெரி­விக்­கையில்;

நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. ஆனால் ஒரே ஒரு விட­யத்தில் மாத்­தி­ரமே கடந்த கால அர­சாங்­கத்தின் கொள்­கையைப் பின்­பற்­று­கி­றது.

அது பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் விவ­கா­ரத்­திலும் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ராம விகாரை அதி­ப­தியின் விவ­கா­ரத்­தி­லாகும். இன­வா­தத்தைத் தூண்ட முயற்­சிக்கும் இவர்­களை அர­சாங்கம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

முஸ்­லிம்­களை எதி­ரி­க­ளாக எண்­ணி­யி­ருக்கும் ஞான­சார தேரர் குர்ஆன் விளக்­கங்­களை அறிந்து கொள்­வ­தற்குத் தேவை­யில்லை. உலமா சபை தெளி­வான விளக்­கங்­களை வழங்­கி­னாலும் ஞான­சார தேரர் அதனை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டார். அதில் மாற்­றங்­களைச் செய்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல போராட்­டங்­களை முன்­னெ­டுப்பார்.

பொது­பல சேனாவின் செய­லாளர் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட ஒருவர். அவர் காவி­யுடை அணிந்­தி­ருப்­ப­தி­னாலே மக்கள் அவரை மதிக்­கின்­றனர். இல்­லையேல் அவர் பல சவால்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருப்பார். மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட அவ­ரது கடிதம் தொடர்பில் உலமா சபை அலட்டிக் கொள்ளத் தேவை­யில்லை.

சிறைக்குள் இருக்க வேண்­டி­ய­வர்கள் சுதந்­தி­ர­மாக நட­மாட விடப்­பட்­டி­ருப்­ப­த­னா­லேயே இன்று இனவாதம் தலையோங்கியுள்ளது.

குர்ஆனுக்கு விளக்கம் கோரியிருப்பது வேறோர் இனவாத முயற்சிக்கான ஏற்பாடாகும். எனவே உலமா சபையும் முஸ்லிம் சமூகமும் இச்சந்தர்ப்பத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.
அல் குர்ஆனுக்கு ஞானசார தேரர் விளக்கம் கோரியிருப்பது இனவாத முயற்சிக்கான ஏற்பாடாகும். அல் குர்ஆனுக்கு ஞானசார தேரர் விளக்கம் கோரியிருப்பது இனவாத முயற்சிக்கான ஏற்பாடாகும். Reviewed by Madawala News on 12/01/2016 02:30:00 PM Rating: 5