Accaddemy

ACJU_இற்கு_சமர்பணம்...

BBS கேட்ட கேள்விகளுக்கு ACJU# அவசரப்பட்டு வெளியிட்ட வீணான அறிக்கையால் விமர்சனங்களை கேட்டு வாங்கிக் கொண்டதாக ஆகி விட்டது.

இக்கேள்விகளுக்கான பதிலை வழங்குவது காலத்தினதும், மார்கத்தினதும் கட்டாயமாகும். அத்துடன் போதுமான புத்தி ஜீவிகளின் ஆலோசணைகளுடனும், மார்க்க விதியை வலைக்காத நடுநிலையுடனும், அனைத்து அமைப்பினரையும் இணைத்து பதில் கூறும் வாய்ப்பு ACJU இற்கு தாராளமாக உள்ளது.

இந்நிலையை ACJU உணராவிட்டால் கம்பெடுத்தவன் வேட்டைக்காரன் போல், எவரேனும் அவசரப்புத்திக் காரர்கள் குறித்த கேள்விகளுக்கு அலட்சிய பதிலை தானாக முன்பாய்ந்து வழங்கலாம். இந்நிலையானது சமூகத்திற்கும் மார்க்கத்திற்கும் பேராபத்தாகும்.

குறித்த மடலில் "தலைவர்/செயலாளர் குறிப்பிடப் படவில்லை என்றாலும் ACJU முகவரிக்கு அனுப்பப் பட்டிருக்கின்றமையையும், ACJU குறிக்கப் பட்டிருக்கின்றமையையும் கவனத்தில் கொள்வது நிர்வாக ஒழுங்காகும். 

ஒருவேளை இது மொட்டைக் கடிதம் எனும் ஐயம் இருப்பி்ன் உத்தியோகப்பூர்வமான எழுத்துமூலம்  BBS இடம் இதுகுறித்து விளக்கம் கேட்கலாம். அதை தவிர்த்து ஒருபக்கப் பார்வை அறிக்கை விடுவதானது பல்விதமான தப்பான கணிப்பீடுகளுக்கே வழியமைக்கும்.

குறிப்பு:- இது விமர்சணமல்ல. சமூக நலனுக்கான ஆலோசனை என்பதை அறிக.


ACJU_இற்கு_சமர்பணம்... ACJU_இற்கு_சமர்பணம்... Reviewed by Madawala News on 12/01/2016 10:23:00 AM Rating: 5