Ad Space Available here

எந்த அர­சாங்­கமும் செய்­யாத இன நல்­லி­ணக்க வேலைத்­திட்­டத்­தினை நல்லாட்சி அர­சாங்கம் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக செய்து வரு­கின்­றது..


- எம்.எஸ்.எம்.நூர்தீன் -
இலங்­கையில் கடந்த எந்த அர­சாங்­கமும் செய்­யாத இன நல்­லி­ணக்க வேலைத்­திட்­டத்­தினை நல்லாட்சி அர­சாங்கம் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக செய்து வரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டார நாயக்க குமா­ர­துங்க மட்­டக்­க­ளப்பில் வைத்து தெரி­வித்தார்.

மாண­வர்­களின் தேசிய நல்­லி­ணக்க செயற்­திட்­ட­மான 'சகோ­தர பாசல' எனும் செயற்­திட்ட முகாம் மட்­டக்­க­ளப்பில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற போது அதன் நிறைவு வைப­வத்தில் கலந்­து­ரையாற்றுகை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மட்­டக்­க­ளப்பு சத்­துருக் கொண்டான் சர்­வோ­தய நிலைய வளா­கத்தில் நடை­பெற்ற இந்த நிகழ்ச்­சித்­திட்­டத்தில் தொடர்ந்­து­ரை­யாற்­றிய

அவர், தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டையே நல்­லி­ணக்கம் இல்­லா­ததன் காரணம் தான் கடந்த முப்­பது வருட யுத்­த­மாகும் என்­பதை நாம் அடை­யாளம் கண்டோம்.

 யுத்­தத்­திற்கு முகம் கொடுத்­தவர் அந்த பிரச்­சி­னை­க­ளுடன் வாழ்ந்­தவர் என்ற வகையில் பல் வேறு சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­தவர் என்ற ரீதியில் இந்த இன ரீதி­யான பிரச்­சி­னைக்­கான கார­ணத்தை அறிந்து அதற்கு தீர்வு காண­வேண்­டு­மென நினைத்தேன்.

 இலங்கை சுதந்­திர மடைந்­தது முதல் எனக்கு தெரிந்த வகையில் இலங்கையில் ஆட்சி செய்த ஒரு அர­சாங்­கமும் இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை செய்ய வில்லை. ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வேலை­களை செய்­வது போன்று தெரி­கின்­றது.

 நீங்கள் என்­னிடம், 11 வரு­டங்கள் நீங்கள் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தீர்கள் தானே நீங்கள் என்ன செய்­தீர்கள் என கேட்­கலாம்.

 நான் அதி­கா­ரத்­திற்கு வந்­த­வு­ட­னயே நான் சமா­த­னத்­திற்­கான வேலைத்­திட்­டத்­தினையும் நல்­லி­ணக்­கத்­திற்­கான கருத்­தி­னையும் பேசினேன் அப்­போது சில சிரேஷ்ட அமைச்­சர்கள் அவ்­வாறு இன நல்­லி­ணக்­கத்­தைப்­பற்றி பேச வேண்டாம் உங்­க­ளுக்கு வாக்கு குறைந்து விடும் என்று கூறி­னார்கள்.

 ஆனால் நான் வடக்­கி­லி­ருந்து தெற்கு, கிழக்­கி­லி­ருந்து மேற்கு வரைக்கும் இன நல்­லி­ணக்­கத்­தையும் சமா­த­னாத்­தை­யுமே பேசினேன். மக்கள் எனக்கு அதன் மூலம் பெரு­மல­வி­ளாள ஆத­ர­வினை தந்­தார்கள்.

 சமா­தானம் சம்­பந்­த­மான கருத்­தினை இலங்கை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்­டார்கள் என்ற கருத்து பொய் என்­பதை எனக்கு கிடைத்த வாக்­கு­களை வைத்து நான் நிரூ­பித்தேன்.

 சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எனக்கு அதி­க­மாக வாக்­க­ளித்­தார்கள். வடக்கில் அன்­றைய சூழ் நிலையில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் தலைவர் பிர­பா­கரன் வாக்­க­ளிப்­பதை த:டுத்­தி­ருந்தார். எனினும் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் 85 வீதம் எனக்கு வாக்­க­ளித்­தார்கள். 

 எனது அர­சாங்கம் 1994 ஆம் ஆண்டு ஆட்­சி­ய­மைத்த பிறகு வெண்­தா­மரை எனும் இயக்­கத்தை ஆரம்­பித்து நான் சமா­தானம் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டத்­தினை மேற் கொண்­ட­துடன் பல் வேறு சமா­தான செயற்­திட்­டங்­க­ளையும் மேற் கொண்டேன். 

 அப்­போது விடு­த­லைப்­பு­லி­களை பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்தோம். என்­றாலும் அவர்கள் கேட்­க­வில்லை. இருந்­தாலும் தமிழ் மக்கள் மத்­தியில் மாற்­றத்­தினை கொண்டு வர­வேண்­டு­மென நான் முயற்சி செய்து அதற்­கான நட­வ­டிக்கை எடுத்த போது அதற்கு பயந்து என்னை கொலை செய்ய புலிகள் எத்­த­னித்­தார்கள். சில இன வாதி­களும் என்னை விமர்­சித்­தார்கள்.

 சமா­தா­னம் மற்றும் நல்­லி­னக்­கத்­துக்­காக அன்றும் சிலர் உழைத்­தார்கள், உழைப்­பவர்கள் சிலர் இன்றும் இருக்­கின்­றார்கள்.
 தற்­போ­தைய ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் இந்த நல்­லி­ணக்க செயற்­பாட்டை மேற் கொள்­வதில் அக்­க­றை­யோடு செயற்­ப­டு­கின்­றனர்.
 இந்த அர­சாங்­கத்தை கொண்டு வரு­வ­தற்கு நான் கணி­ச­மான பங்­க­ளிப்பு செய்­தவள் என்ற வகையில் பல்வேறு பத­வி­க­ளையும் எனக்கு தரு­வ­தற்கு முன்­வந்­தார்கள்.

ஆனால் அவை­களை நான் பொறுப்­பெ­டுக்க வில்லை. எனினும் இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக நல்­லி­ணக்கம் தொடர்­பான ஒரு பொறுப்பை எடுத்தேன்.

 அந்த வகையில் தேசிய நல்­லி­ணக்க செய­ல­கத்தின் மூலம் இந்த நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­களை மேற் கொண்டு வரு­கின்றோம்.

இன்று ஜனா­தி­ப­தி­ய­ும் பிரத மந்­திரியும் பொது­வான அடிப்­ப­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டுமென ஒரே நோக்­கத்தின் அடிப்­ப­டையில் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

 ஒருவர் இன்­னொ­ரு­வ­ருக்கு உதவி செய்து கொண்டு பொது­வான சிந்­தனை அடிப்­ப­டையில் நாட்டைக் கொண்டு செல்­கின்­றார்கள். விஷே­ட­மாக நல்­லி­ணக்கம் என்ற ரீதியில் இவ்­வி­ரு­வரும் ஒரே கருத்­துடன் இந்த நாட்டை ஆட்சி செய்­கின்­றார்கள்.

எதிர் காலத்தில் இவ்­வா­றான மாண­வர்­களின் மூலம்  இந்த நாட்டில் இளம் பரா­யத்­தி­லி­ருந்தே நல்­லி­ணக்கம், புரிந்­து­ணர்வு என்­ப­வற்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இவ்­வா­றான நல்­லி­ணக்க செயற்­திட்­டங்கள் வெற்­றி­ய­ளிக்கும் என நம்­பு­கின்றேன்.

எமது நாடு சிறிய நாடாக இருந்த போதும் மிகப்­பெ­ரிய வர­லாற்­றினைக் கொண்ட நாடு  நாக­ரீகம் வளர்ந்த நாடு 2000 வரு­டங்கள் தொடர்­பான நாக­ரீக வர­லாற்­றினை கொண்ட நாடாகும்.
 
அந்த 2000 வரு­டங்கள் சிங்­களம் பௌத்தம் என்று சொன்­னாலும் சிங்­கள பௌத்த கலா­சாரத்­திற்கு உயி­ரோட்டம் கொடுப்­ப­வர்­க­ளாக அல்­லது அதை போசிப்­ப­தற்கு தமிழ் முஸ்லிம் பறங்­கி­யர்கள் போன்ற மூவின மக்­களும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளார்கள்.

இப்­போது இந்த நாட்டில் நூற்­றுக்கு இரு­பது வீத­மான சிறு­வர்கள் சரி­யான உணவு இல்­லாமல் மந்த போச­னைக்­குட்­பட்ட சிறுவர்­க­ளாக இருக்­கின்­றனர்.

அரச நிர்­வாக சீர்­கேடு கார­ண­மாக 97 வீத­மான மாண­வர்கள் சாதா­ரண தரம் வகுப்­பு­வரை முழு­மை­யாக நிறைவு செய்­வ­தில்லை. 
 நிதி ஒழுங்­காக வழங்­கா­த­தாலும் கொள்­கைகள் இல்­லா­த­தாலும் முட்டாள் கல்­வி­ய­மைச்­சர்­களும் நிய­மிக்­கப்­பட்­ட­தாலும் இந்த நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இதனை நிவர்த்தி செய்வதற்கு நமது நாட்டின் பொருளாதாரம் நிவர்த்தி செய்யப்படல் வேண்டும். அதை நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டுமாக இருந்தால் இனங்களுக்கிடையில் நல்லுறவும் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும். 

இன்றும் நமது நாட்டில் நல்லிணக்கம் என்ற மழை தூறல்கள் கூட இல்லை. எனவே எதிர் காலத்தில் நமது நாட்டில் நல்லிணக்கம் என்ற மழை பெய்ய வேண்டும் அதன் மூலம் நாட்டில் இன நல்லுறவும் சமாதானமும் ஐக்கியமும் ஏற்பட வேண்டும்.

அதற்காக நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
எந்த அர­சாங்­கமும் செய்­யாத இன நல்­லி­ணக்க வேலைத்­திட்­டத்­தினை நல்லாட்சி அர­சாங்கம் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக செய்து வரு­கின்­றது.. எந்த அர­சாங்­கமும் செய்­யாத இன நல்­லி­ணக்க வேலைத்­திட்­டத்­தினை நல்லாட்சி அர­சாங்கம் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக செய்து வரு­கின்­றது.. Reviewed by Madawala News on 12/01/2016 11:27:00 AM Rating: 5