Accaddemy

முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் நாங்கள்தான் என்று கூறுபவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இனிமேலும் சமூகத்தை காட்டிக்கொடுத்து விடாதீர்கள்..



ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ், முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக கணிக்கப்பட்டாலும், சில நேரங்களில் அவர்கள் எடுத்த பல தீர்மானங்கள் இன்றுவரை சர்ச்சைக்குறியதாகவும், மர்மம் நிறைந்ததாகும் இருந்து வருகின்றன.

அதில் ஒன்றுதான், அன்றிருந்த முஸ்லிம் சமூகத்திடம் எந்தவிதமான கருத்தையும் கேட்காமல் 1987ம் ஆண்டு,13வது யாப்புத் திருத்தத்தின் ஊடாக அன்றய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள், தனது அதிகாரத்தை பாவித்து வடக்கையும் கிழக்கையும் தற்காலிகமாக இணைத்த விடயமாகும்.

தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தாலும், இந்த வடகிழக்கு இணைப்பை அன்று கடுமையாக எதிர்த்து வந்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ், 1988ம் ஆண்டு நடந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் ஒரு தரப்பாக போட்டியிட்டதன் காரணமாக, 
வடகிழக்கு இணைப்புக்கு கொள்கையளவில் சம்மதம் தெரிவித்திருந்தார்கள்.

அதற்கு முதல் இந்த ஒப்பந்தத்துக்கு  கடும் எதிர்ப்புத்தெறிவித்து வந்தவர்களே, அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டதனால், தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த மாகாணசபைகள்,  சர்வஜன வாக்கெடுப்பு நடத்த படாமல் நிரந்தரமாக இணைக்கப்பட அது ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.

அந்த தேர்தலில் போட்டியிட்டதன் பின் முஸ்லிம் சமூகத்துக்கு நண்மை கிடைத்ததோ தெறியாது, ஆனால் பல தீமைகள்தான் தமிழ் குழுக்களினால் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டதை வரலாற்றில் நாம் காணலாம்.

அந்த தேர்தலில் போட்டியிட்டு, அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதன் பிற்பாடு, அன்றிலிருந்து மு.காங்கிரஸின் நிலைப்பாடு வடகிழக்கு விடயத்தில், முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துக்களையும், கொள்கைகளையும் முன் வைத்து வந்தது என்பதை நாம் அறிவோம்.

அதே நேரம், இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக, பிறகு நடந்த பேச்சுவார்த்தைகளில் எல்லாம் முஸ்லிம்களை மூன்றாம் தரப்பாககூட தமிழ் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று வடகிழக்கு பிரிந்திருக்கும் நிலையில் முஸ்லிம்களுடன் பேசுவதற்கு காட்டும் ஆர்வத்தை போன்று, அன்று அவர்கள் எங்களுடன் பேசுவதில் ஆர்வம் காட்டவில்லை.காரணம், வடகிழக்கு தேர்தலில் போட்டியிட்டு இணைப்புக்கு மறைமுகமாக அன்று ஆதரவு தெறிவித்ததுதான் என்பது புலனாகும்.

இப்படியான சர்ச்சைக்குறிய தேர்தலில், மு.காங்கிரஸ் ஏன்? அவசரமாக முடிவெடுத்து போட்டியிட்டது என்ற வினா எழுப்பப்பட்டாலும், இதுவரை அந்த கட்சியினால் அதற்குறிய உண்மையான காரணம்  தெறிவிக்கப்படவில்லை.

அந்த காரணத்துக்கு பதில் தறுவது போன்று, அந்த நேரத்தில் கட்சியின் தவிசாளராக இருந்த சேகு இஸ்ஸடீன் அவர்கள் "முஸ்லிம் சுய நிர்ணயம்"என்ற அவருடைய புத்தகத்தில் பதில் அளித்துள்ளார்.

அவருடைய அந்த புத்தகத்தில், 1988ம் ஆண்டு நடந்த மாகாணசபை தேர்தலில் அவசரமாக போட்டியிடுவதற்கு நான்தான் காரணம் என்றும் எழுதியுள்ளார்.

அந்த தேர்தலில், தலைவர் அஸ்ரப்புடன் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலன் கருதி அந்த தேர்தலில் போட்டியிடுவதை விரும்பியிருக்கவில்லை என்றும், நானும், ஹிஸ்புல்லா அவர்களும், ஜவாத் மரிக்கார் அவர்களுமே இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னின்றோம் என்றும் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தின் 25ம் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.

"முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் போட்டியிட்டு இருக்காதுவிட்டால், கிழக்கிலும் போட்டியில்லா தேர்தலே நடந்திருக்கும்.அதன் விளைவாக வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்ட மாகாணசபை உருவாக்கம் கேள்விக்குறியாகவே ஆக்கப்பட்டிருக்கும்.
வடகிழக்கு தற்காலிக இணைப்பிலிருந்து 2006க்கு பதிலாக,1996க்கு முன்னரேயே வடக்கு கிழக்கின் தற்காலிக இணைப்பு இல்லாதொழிக்கப்பட்டிருக்கும்.

இதன் மூலம் வடக்கு கிழக்கின் தற்காலிக ஒன்றிணைப்பையும் அதன் மூலமாவது வடக்கு கிழக்கு இணைந்த ஒரு மாகாணசபை ஆட்சி அதிகாரத்தையாவது பெறுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணமாக இருந்தனர்.

இலங்கை தமிழ் தேசியத்தின் போராட்ட வரலாற்றில் வடக்கு கிழக்கு இணைப்பை சொற்ப காலத்தில் அர்த்த புஷ்டியாக்கியவர்கள் முஸ்லிம்கள்தான்."என்று எழுதியுள்ளார்.

இதனையே வடகிழக்கின் முன்னால் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அவர்களும் கூறியிருந்தார், அன்று வடக்கு கிழக்கு தேர்தலில் மு.காங்கிரஸ் போட்டியிடாமல் இருந்திருந்தால் தற்காலிகமாகக்கூட வடகிழக்கு இணைந்திருக்க மாட்டாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதற்கான காரணம், இந்த தேர்தலின் ஊடாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சியை மக்கள் மத்தியில் பிரபல்ய படுத்துவதே ஆகும். அதற்க்காகத்தான் இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிட தீர்மானித்தோம்  என்றும் கூறியுள்ளார்.

அவர் கூறும் காரணங்களுக்கு அப்பால், அன்று அந்த கட்சியின் உயர்பீட உறுப்பினராக இருந்தவரும், தலைவர் அஸ்ரப் அவர்களின் மச்சானுமாகிய சட்டத்தரணி சரூக் காரியப்பர் அவர்கள் ஒரு முறை இந்த விடயம் பற்றி எங்களிடம் கூறும்போது,

வடகிழக்கு தேர்தலில் நாம் போட்டியிட்டால், முஸ்லிம் சமூகத்துக்கு  துரோகம் செய்தவர்களாக மாறுவோம்.
ஆகவே,  இந்த தேர்தலில் போட்டியிடுவதை நாம் தவிர்க்க வேண்டும் என்று, கூட்டம் கூடி முடிவெடுத்ததாகவும், முடிவு எடுத்ததன் பிற்பாடு, எங்களுக்கு தெறியாமல்தான் திடீரென தேர்தலில் போட்டிபோட அவர்கள் தீர்மானித்ததாகவும், ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்பதற்காக, டாம் வீதியில் உள்ள கட்சி காரியாலயத்துக்கு நானும், பசீலே மஜீத் அவர்களும் சென்ற போது, சேகு இஸ்ஸதீன் அவர்கள் ஒரு "பீரோவை" திறந்து காட்டியதாகவும் அதற்குள் நிறைய பணம் இருந்ததாகவும் கூறினார்.அவ்வளவு பணத்தையும் கண்டவுடன் தனக்கு தலைசுற்றல் ஏற்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இந்தியாவின் பணத்துக்குத்தான் இவர்கள் அந்த தேர்தலில் போட்டியிட்டார்கள் என்று திட்டவட்டமாக எங்களிடம் கூறினார். 

மேலும் அவர் கூறும் போது தலைவர் அஸ்ரப் நல்லவர் என்றும், அவரை வழிகெடுத்தவர் இந்த சேகுதான் என்றும் கூறினார்.
இதனை நாங்கள் இணையதளத்தில் எழுதவா என்று கேட்டபோது தாராளமாக எழுதுங்கள் நான் அதட்கு சாட்சி என்றும் கூறினார்.

ஆகவே, மக்களாகிய நாங்கள் கேட்கும் கேள்வி என்னவென்றால், அற்ப காரணங்களுக்காக நமது சமூகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்த இந்த செயல்பாட்டை என்னவென்று கூறுவது.

அந்த தேர்தலில் அவர்கள் போட்டியிடாமல் விட்டிருந்தால் நிச்சயமாக வடகிழக்கு இணைந்திருக்காது, அதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தை மூன்றாம் தரப்பாக அவர்கள் அழைத்து பேசுவதற்கு முயற்சி செய்திருப்பார்கள், எமது சமூகத்தை கழித்துவிட்டு எந்த தீர்வையும் பெற அன்று அவர்களால்  முடியாமல் போயிருக்கும்.

தமிழ் தரப்புக்கு முக்கியமாக தேவைப்பட்ட ஒன்றை இலேசாக அவர்கள், இவர்கள் மூலம் பெற்றதனால், முஸ்லிம்களின் முக்கியத்துவம் அவ்விடத்தில் இல்லாமல் செய்யப்பட்டதற்கு இவர்களின் செயல்பாடே காரணமாகும்.

இன்று ஏதோ ஒருவகையில் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டுள்ளது.,
அதனால் முஸ்லிம்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொண்டு பேசுவதற்கு தமிழ் தலைவர்களும், சிங்கள அரசாங்கமும் முயற்ச்சிப்பதை கண்கூடாக காண்கின்றோம்.

இந்த நிலைமை வடகிழக்கு பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த முக்கியத்துவம் முஸ்லிம்களுக்கு  கிடைத்திருக்குமா.?
என்ற கேள்வி எழுகின்றது அல்லவா.

ஏதோ ஒரு காரணத்தினால் அன்று வடகிழக்கு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டதனால்,
எந்த நண்மையையும் நாம் பெறவில்லை.,மாறாக பல இன்னல்களைத்தான் முஸ்லிம் சமூகம் அன்று சந்தித்தது.

அந்த தேர்தலில் வெற்றிபெற்றுச் சென்ற மாகாணசபை உறுப்பினர்கள் கூட எதையும் சாதித்ததாக தெறியவில்லை.

அதே நேரம், வழுவான நோக்கமும், காரணமும் இல்லாமல்.,சாதாரண காரணங்களுக்காக மாபெறிய வரலாற்றுத்தவரை செய்துவிட்டு, இப்போது அதற்கு நான்தான் காரணம் என்று பெருமை பேசுவதில் என்ன நியாயம் உள்ளது.

இப்படியான விடயங்களில் பூரண அறிவு இல்லாத பாமரமகன் வேண்டுமென்றால் அவர்களின் கதைக்கு கைதட்டலாம்.
படித்த மக்களும் இப்படியான விடயங்களை தட்டிக்கேட்டு, கேள்வி கேற்காமல் ஒதுங்கிப் போவதை எப்படி நியாயப்படுத்தலாம்.

ஆகவே இப்போது முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் நாங்கள்தான் என்று கூறுபவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இனிமேலும் சமூகத்தை காட்டிக்கொடுத்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்வதை தவிர வேற ஒன்றையும் எங்களால் கேட்கமுடியாது என்பதே உண்மையாகும்.

எம்.எச்.எம்.இப்ராஹிம்
கல்முனை....
முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் நாங்கள்தான் என்று கூறுபவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இனிமேலும் சமூகத்தை காட்டிக்கொடுத்து விடாதீர்கள்.. முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் நாங்கள்தான் என்று கூறுபவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இனிமேலும் சமூகத்தை காட்டிக்கொடுத்து விடாதீர்கள்.. Reviewed by Madawala News on 12/01/2016 05:16:00 PM Rating: 5