Accaddemy

அரேபிய கலாச்சாரங்களை இலங்கைக்கு கொண்டுவர வேண்டாம் ..

இலங்கைக்கு இஸ்லாம் மதத்தை கொண்டுவருவதில் பிரச்சினை இல்லை, என்றாலும் அரேபிய கலாச்சாரங்களை இலங்கைக்கு கொண்டுவர வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருப்பது இலங்கை கலாச்சாரம் எனவும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
சில இஸ்லாமியர்கள் உட்பட பௌத்தர்களும் பேஸ்புக் மூலம் வீரர்களாக செயற்படுவதாகவும், அவர்கள் ஒருவருக்கும் தமது மதம் தொடர்பில் எதுவும் தெரியாது எனவும், வெறும் இனவாதத்தை பரப்பி பின்னர் அரசியலுக்கு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். 

அரேபிய கலாச்சாரங்களை இலங்கைக்கு கொண்டுவர வேண்டாம் .. அரேபிய கலாச்சாரங்களை  இலங்கைக்கு கொண்டுவர வேண்டாம் .. Reviewed by Madawala News on 12/01/2016 06:43:00 PM Rating: 5