tg

பஸ் ஸ்ட்ரைக்கு.. என்ன செய்து விடுவார்கள்? அரசால் அடுத்து என்னென்ன செய்யலாம்.இன்றைய பஸ் வேலை நிறுத்தம் மூலம் தமது எதிர்பார்ப்புக்களை அடைந்து கொள்ளுமா என்றால் அதற்கான சாத்தியப்பாடுகள் அறிது என்றே கூற வேண்டும். அவ்வாரான எதிர்வு கூரல்களுக்கான முக்கிய காரணங்கள் பல உண்டு

பொதுவாக 90 வீதமான பஸ் வண்டிகள் பினேன்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமானதாகவே காணப்படுகின்றது. மாதா மாதம் பினேனஸ் கம்பனிகளுக்கு செலுத்தப் படவேண்டிய பணம் நாளாந்த வருமானத்திலிருந்து, ஒதுக்கப்படும் பணத்திலிருந்தே பெரும்பாலும் செலுத்தப்படுவதுண்டு. அத்துடன் வேலை நிறுத்தம் இடம் பெறும் காலப்பகுதியில் சாரதி, நடத்துனர் வேதணமும் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைமை காரணமாக ஒரு பஸ் வண்டியால் மூன்று தினங்களுக்கு மேல் வேலை நிறுத்தம் செய்வது என்பது பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.

அடுத்து அரசு இந்த வேலைநிறுத்தம் குறித்து பினவாங்குவதற்கான அடையாலங்கள் இன்னும் தெண்படவில்லை. எனவே மூன்று நாள் வேலை நிறுத்தத்தின் பின்னும் அரசு தகுந்த பதில் தராதவிடுத்து. இது அடையால வேலை நிறுத்தம் மாத்திரமே இதன் பின் இன்னுமுள்ள சங்கங்களையும் சேர்த்துக் கொண்டு பாரிய வேலை நிறுத்தம் ஒன்றை அடுத்த மாதமே ஆரம்பிப்போம் என்ற அறிவித்தலுடன் வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

எனினும் இந் வேலை நிறுத்தங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரசு சில மாற்று நடவடிக்கைகளை மேற் கொள்ளும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும். அவை சில சட்ட அமுலாக்கல் அல்லது சட்டம் அறிமுகப்படுதல் போன்ற அடிப்படையிலும் இடம்பெறலாம்.

உதாரணமாக

* பஸ்வண்டியின் ஆசணங்கள் இரண்டுக்கு இடையிலான இடைவௌி வரையறுக்கப்பட்டு இவை மீறப்படும் போது அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்தல்
* சாரதி நடத்துணர் சீறுடை கட்டாயமாக்கல்
* டிக்கட் வினியோகத்துக்கான இயந்திரம் பயண்படுத்தாத போது விதிக்கப்படும் தண்டப்பணத்தில் அதிகரிப்பு
* பஸ் வண்டியினுல் பொறுத்தப்படும் தொலைக்காட்சி வனொலிப் பெட்டிகளுக்கான கட்டுப்பாடுகளும் தண்டமும்
* அரை சொகுசு சொகுசு சேவைகளில் ஆசணங்களுக்கு மேலதிகமா ஆட்கள் ஏற்றுவது தடை செய்தலும் தண்டம் அறவிடலும்
* நடத்துணர்கள் பயணிகளிட் ஒழுங்கீணமாக நடந்து கொள்ளும் போது அவற்றை முறையிட விஷேட தெலை பேசி எண்..
* பஸ் தரிப்பிங்களில் (பஸ் நிலையங்களல்ல) அதிக நேரம் தரித்து நிற்கும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
* இன்னும் பல புதிய சட்டங்கள்...

இவ்வாறு தற்போது அமுலிலிருக்கும் சட்டங்கள் பலப்படுத்தப்படுவதுடன் புதிய சட்டங்கள் அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்வுடன் 25000 ரூபா பிரச்சினை புதிய சட்ங்களைத் தளர்த்திக் கொள்வது என்ற பகுதிக்கு இடம்மாறும்.. சிலவேலை சட்டங்கள் தளர்த்தப்படலாம் தண்டப்பணம் அறவீடு அவ்வாறே இருந்துவிடும் என்பது எனது கணிப்பு..

வெலம்பொட ராஃபி
2016.12.02
பஸ் ஸ்ட்ரைக்கு.. என்ன செய்து விடுவார்கள்? அரசால் அடுத்து என்னென்ன செய்யலாம். பஸ் ஸ்ட்ரைக்கு.. என்ன செய்து விடுவார்கள்? அரசால் அடுத்து  என்னென்ன செய்யலாம். Reviewed by Madawala News on 12/02/2016 12:08:00 PM Rating: 5