Kidny

Kidny

அபராதத் தொகை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் ஓடாது.



சாரதிகளுக்கான அபராதத் தொகை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனியார் பஸ் சங்கங்கள் சில இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.

மேலும், இன்றைய தினத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வினை வழங்காவிடில் நிச்சயம் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், அனைத்து இலங்கை பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பிரதம செயலாளர் அங்ஜன பிரியன்ஜீத் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, அபராதத் தொகையை அதிகரிப்பதை நீக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், அபராதத் தொகை அதிகரிப்பானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாது என, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க கூறியுள்ளார்.

மேலும் குறித்த திருத்தத்தை மேற்கொள்ள ஒரு வருடத்திற்கும் அதிக காலம் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இவ்வாறு இருக்க, நான்கு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்க சம்மேளனம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் ஓடாது.  அபராதத் தொகை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் ஓடாது. Reviewed by Madawala News on 12/01/2016 10:29:00 AM Rating: 5