Accaddemy

தற்போது முன்னெடுக்கப்படும் தனியார் பஸ் ஸ்ட்ரைக்.. நிலவரம் இதுதான்.



தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

நேற்று நள்ளிரவு தொடக்கம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

உத்தேச வாகன அபராத தொகையை அகற்றிக்கொள்ளுமாறு அதிகாரிகளை வலியுறுத்தும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது..

போராட்டத்தில் முச்சக்கரவண்டிகள் சங்கம், பாடசாலை வேன் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களின் ஆதரவு கிடைக்கும் என அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்னான்டோ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு பிரதான பேருந்த சங்கங்கள் சில ஆதரவு தெரிவிக்கவில்லை.

போராட்டம் காரணமாக பொதுப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாமலிருக்க இலங்கை போக்குவரத்து சபையும், இலங்கை புகையிரத சேவையும் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையின் பெருமளவிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்தார்.

போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் க.பொ.த சாதாரண தர மாணவர்களின் பொருட்டு விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பிரதேசங்களில் பணிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரியவருகிறது.
தற்போது முன்னெடுக்கப்படும் தனியார் பஸ் ஸ்ட்ரைக்.. நிலவரம் இதுதான். தற்போது முன்னெடுக்கப்படும் தனியார் பஸ் ஸ்ட்ரைக்.. நிலவரம் இதுதான். Reviewed by Madawala News on 12/02/2016 08:56:00 AM Rating: 5