Accaddemy

டான் பிரியசாத் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை.



இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  “டான் பிரியசாத்” என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத இன்று காலை பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார்.

விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முறைப்பாட்டாளர் சார்பில் எந்த வித ஆட்சேபனைகளும் இல்லை என ஏற்கனவே தெரிவிக்கபட்டு இருந்ததால் இன்று (டிசம்பர் 2) பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார்.

 200000 ரூபாய் சரீரப் பிணையில் விடுக்கப்பட்டுள்ள இவருக்கு இதே குற்றத்தை மீண்டும் செய்தால் குறித்த வழக்கு விசாரணை நிறைவு பெரும் வரை சிறையில் இருக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் பெப்ரவரி மதம் 17 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டான் பிரியசாத் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை.  டான் பிரியசாத் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை. Reviewed by Madawala News on 12/02/2016 11:14:00 AM Rating: 5