Accaddemy

இஸ்ரேலில் அண்மையில் ஏற்பட்ட தீயும், முகநூல் பதிவுகளும்..



இஸ்ரேலில் அண்மையில் ஏற்பட்ட தீ முகநூல் வட்டத்திலும் சமூகமட்டத்திலும்  ஏற்படுத்திய தீயை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த விடயத்தில்  நம் சமூகம் நிதானமிழந்து நடந்து கொண்டதா என்ற
கேள்வி என்னை உறுத்திக்கொண்டேயிருக்கிறது.

இந்த விடயம் தொடர்பில் நாமே நம்மிடம் சில கேள்விகைள கேட்டுக்கொள்வது இதன் பயங்கரத்தை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்


1.இஸ்ரேலில் உள்ள அனைவரும் பலஸ்தீனை அங்கீகரிக்காத பலஸ்தீனர்களை கொலை செய்ய தருணம் பார்த்திருப்பவர்களா?

2.இஸ்ரேலிய அரசு பலஸ்தீன மக்களுக்கு எதிராக செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் இஸ்ரேலியர்கள் இஸ்ரேலுக்குள் வாழ்ந்து வருவதில்லையா?

3. இஸ்ரேலில் வாழும் அனைவரும் அழிக்கப்பட வேண்டியவர்களா?

4.அது மட்டுமல்ல நாங்கள் கருத்து பதிவது இலங்கையில் இருந்து கொண்டு. நாங்கள் எமது சகோதர இனத்துக்கு இஸ்லாத்தையே ஒழுங்காக முன்வைக்கவில்லை என்பதே உண்மை.

அப்படியிருக்கும் போது சியோனிஸ்ட்களுக்கும் பலஸ்தீன மக்களுக்குகெதிரான அவர்களின் அடாவடிகள் மற்றும் மார்க்கரீதியான வேறுபாடுகள் தொடர்பில் எமது நாட்டு சகோதர இனத்தவர்க்கு எந்தளவு அறிமுகம் இருக்கும் என்பது சந்தேகம்.

இந்தப் பின்னணிகள் எதுவுமே தெரியாமல் வெறுமனே எமது இஸ்ரேல் வெறுப்பு பேஸ்புக் பதிவுகளை பார்க்கும் போது எமது சகோதர இனத்தவர்கள்

இஸ்லாத்தை பற்றி என்ன நினைப்பார்கள்?

முஸ்லிம்களை பற்றி என்ன நினைப்பார்கள்?

"இஸ்ரேலை அழிக்க வேண்டும்"

"அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் இறங்க வேண்டும்"

"அவர்களுக்கு மனிதாபிமானம் காட்டக் கூடாது"

"இஸ்ரேல் தீயின் மீது பெற்றோல் மழை பெய்து அவர்கள் அனைவரும் உடல் கருகி அழிய வேண்டும்"

இப்படியான மற்றும் இதனை விட
மோசமான வார்த்தைகளுடன் கூடிய பதிவுகளை பலஸ்தீன் இஸ்ரேல் முரண்பாடு தொடர்பில் அறிமுகமில்லாதவன் எப்படிப் பார்ப்பான்.

ஞானசார தேரர்  இஸ்லாத்தின் மீதும்  முஸ்லிம்கள் மீதும்
முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை தான்
என்ற மாயையை   சகோதர இனத்தவர்களின் மனதில் ஏற்படுத்திவிடும்
எமது இந்த வெறுப்பை கக்கும் பதிவுகள்.

ARM INAS


இஸ்ரேலில் அண்மையில் ஏற்பட்ட தீயும், முகநூல் பதிவுகளும்.. இஸ்ரேலில் அண்மையில் ஏற்பட்ட தீயும், முகநூல் பதிவுகளும்.. Reviewed by Madawala News on 12/01/2016 11:24:00 AM Rating: 5