Free Space

அல்-நஜா இஸ்லாமிய வங்கிச் சேவை கிழக்கில் முதலாவது கிளை. #HNB

 
(எம்.எம்.ஜபீர்)
ஹற்றன் நஷனல் வங்கியின் அல்-நஜா இஸ்லாமிய வங்கிச் சேவையின் தனது 3ஆவது கிளையை  கிழக்கு மாகாணத்தின் முதலாவதாக  கல்முனை  ஹற்றன் நஷனல் வங்கி கிளையில் இன்று  திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு கல்முனை ஹற்றன் நஷனல் வங்கி கிளையின்  முகாமையாளர் ஏ.சீ.சிராஜ் அஹம்மட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஹற்றன் நஷனல் வங்கியின் அல்-நஜா இஸ்லாமிய வங்கிச் சேவைப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஸாம் அலி மற்றும்  ஹற்றன் நஷனல் வங்கியின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் சீ.ஜெகராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதன்போது வங்கி சேவையின் பணவைப்புக்கள், முதாரபாஹ் சிறுவர் சேமிப்புக் கணக்கு, கார்த் ஹசன் நடைமுறைக் கணக்கு, முதாரபாஹ் சேமிப்புக் கணக்கு, முதாரபாஹ் கால வைப்புக் கணக்கு போன்ற சேவைகள் வைபகரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கழக்கழக அரபு மொழி பீடத்தீன்  சிரோஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றசீக், கல்முனை அல்-நஜா இஸ்லாமிய வங்கி சேவையின் பெறுப்பதிகாரி ஏ.அர்ராஜீ கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம்.சாபீத் காலீத், ஹற்றன் நஷனல் வங்கியின் கிளை முகாமையாளர்கள், வர்த்தகர், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அல்-நஜா இஸ்லாமிய வங்கிச் சேவை கிழக்கில் முதலாவது கிளை. #HNB அல்-நஜா இஸ்லாமிய வங்கிச் சேவை கிழக்கில் முதலாவது கிளை. #HNB Reviewed by Madawala News on 12/01/2016 12:56:00 PM Rating: 5