Kidny

Kidny

(வீடியோ) தொடரும் வை.எல்.மன்சூரின் கல்குடா முஸ்லிம்களின் பூர்வீகத்தினை உறுதிப்படுத்தும் தேடல்..ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ தொடரும் தேடல்:-


எமது நாட்டில் முக்கியமாக வடகிழக்கில் முப்பது வருட காலமாக புரையோடி போயிருந்த யுத்தத்தினால் மட்டக்களப்பு கல்குடா பிரதேச எல்லைக்குள் காலாகாலமாக முஸ்லிம்களின் பூர்வீக வசிப்பிடமாகவும் விவசாய காணிகளாகவும் இருந்த இடங்கள் இழக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதனை முஸ்லிம் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் தன்னால் முடியுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வை.எல்.மன்சூரின் தொடர் நடவடிக்கையின் ஓர் அங்கமான பூர்வீக அவ்லியாக்கள் அடக்கப்பட்டுள்ள கப்ர்ஸ்தானங்களை தேடும் ஆராய்ச்சியானது சமூகத்தினால் அண்மை காலமாக பார்க்கப்பட்டு வரும் முக்கிய விடயமாகும்.


அந்த வகையிலே கல்குடா கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் கும்புளான் தவணை கிராமத்தில் அமையப்பெற்றுள்ள பழமை வாய்ந்த அவ்லியாவின் கப்ர்ஸ்தானம் மற்றும் அதனை ஒட்டிய பழமை வாய்ந்த கிணறு போன்றவை அப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் காலாகாலமாக தங்களது சொந்த நெற்காணிகளில் குடியிருப்புக்களை அமைத்து வாழ்ந்தமைக்கான ஆதாரமாக காணப்படுகின்றது.


மேலும் 1990 ஆண்டில் விடுதலை புலிகளின் கொலைகள், ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் காரணமாக முஸ்லிம் விவசாயிகள் தங்களினுடைய பூர்வீக குடியிருப்புக்களையும் விவசாய நிலங்களையும், சொத்துக்கள், அறுவடைக்கு தயாராக இருந்த வேளான்மைகள், பல கோடி ரூபாய்கள் பெறுமதியான கால்நடைகள் என்பனவற்றை  கைவிட்ட நிலையில் உயிர்பிழைத்த நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்திற்கு அகதிகளாக குடியேறியமை என்பது என்றும் கல்குடா முஸ்லிம் மக்களின் மனதினை விட்டகலாத வடுக்களாகும்.


அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட வாகனேரி கிராம சேவகர் பிரிவில் தேக்கஞ்சேனை  பிரதேசத்தில் உள்ள அவ்லியாவின் கப்ர்ஸ்தானமும் இவ்வாறாக கல்குடா முஸ்லிம்களின் பூர்வீக விவசாய மற்றும் மேட்டு நில பயிர்செய்கை,கால்நடை வளர்ப்பு போன்றவைகளை மேற்கொண்டு நிரந்தர குடியிருப்பாளர்களாக இருந்துள்ளனர் என்பதனை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில் சாவன்னா’ பரம்பரை என்ற குடும்பத்தினர் கிரான் குடியில் (தற்போதைய கிரான்) சேரடி முனை என்ற பகுதியில் குடியிருப்பை அமைத்திருந்தனர். இங்கு 1899 பங்குனி 7ம் திகதி முகம்மதியா பாடசாலை 19 பேருடன் இயங்கி வந்துள்ளதற்கான பதிவுகள் கிடைக்கின்றன. நில அளவையாளர் படத்தின் 3501ம் இலக்க 1892 தை 27ல் 29 ஏக்கர் நிலத்தில் பாடசாலை இயங்கியதாக உறுதிப்படுத்துகின்றது.


இவ்வாறு பல இடப் பெயர்களும் அதனோடு தொடர்பான புதூர்ப்போடியார், சின்னப்போடியார், பெரியபோடியார் போன்ற குடிப் பெயர்களும் இப்பிரதேசத்தினை அண்டிய பிரதேசங்களில் இன்றுவரை நிலவி வருவதனைக் காணமுடிகின்றது.

ஆகவே இன்று ஒருமித்த குரலில் வடகிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் சமூகம் தங்களது ஆதரவினை தெரிவிக்க வேண்டும் என பகிரங்மாக அழைப்பு விடுகின்ற தமிழ் தேசியமும் அதன் அரசியல் பிரமுகர்களும் இவ்வாறு அழிக்க முடியாத பூர்வீக வரலாற்றினை கொண்ட குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த, விவசாயம் செய்து வாழும் கல்குடா முஸ்லிம் மக்கள் தங்களது பூர்வீக நிலப்பரப்பில் நிரந்தரமாக குடியேறி இந்த நாட்டில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியின் சுவாச காற்றினை சுவாசிப்பதோடு அதற்காக தங்களால் முடியுமான விட்டுக்கொடுப்புக்களை செய்து தூர நோக்குடனும் பக்கசார்பில்லாமலும் நடந்து கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட கல்குடா முஸ்லிம் சமூகம் சார்பாக வேண்டி நிற்கின்றார் வை.எல்.மன்சூர்.


(வீடியோ) தொடரும் வை.எல்.மன்சூரின் கல்குடா முஸ்லிம்களின் பூர்வீகத்தினை உறுதிப்படுத்தும் தேடல்.. (வீடியோ) தொடரும் வை.எல்.மன்சூரின் கல்குடா முஸ்லிம்களின் பூர்வீகத்தினை உறுதிப்படுத்தும் தேடல்.. Reviewed by Madawala News on 12/02/2016 11:54:00 AM Rating: 5