Free Space

கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி அதிபர் சிஹாரா ரஹீம் பதவி நீக்கம் செய்யபட்டதாக வெளியாகும் செய்தி. உண்மை இதுதான்.



கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி அதிபர் தற்காலிக  பதவி நீக்கம் செய்யபட்டுள்ளதாகவும், மாணவிகளுக்கு  சீருடை விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த பதவி நீக்கம் செய்யபட்டது என பல ஊடகங்கள் இன்று மாலை முதல் செய்திகள் வெளியிடு வரும் நிலையில், நாம் இதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள  சற்றுமுன்னர் அப்பாடசாலை அதிபர் திருமதி சிஹாரா ரஹீம்  அவர்களை தொடர்பு கொண்டோம்,

தான் சற்றுமுன்னர் தான் பாடசாலையில் இருந்து வந்ததாகவும் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது. இது ஒரு பொய்ப்பிரச்சாரம் எனவும், ஒரு அதிபரை  பதவி நீக்குவதென்றால் முதலில் அவருக்கு அறிவிக்கபட்டு பின்னர் தொடர்புபட்ட அதிகாரிகளுடனான விசாரணையின் பின்னரே பதவி நீக்கம் செய்யப்படுவார் என்பது அடிப்படை விதி.

இந்நிலையில் பாடசாலை அதிபர் ஒருவர் திடீரென பதவி நீக்கம் செய்யபட்டுள்ளார் என ஊடகங்கள்  பொறுப்பின்றி செய்தி வெளியிட்டுள்ளது மிகவும் வேதனைக்குரியது எனவும், அச்செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மடவளை நியுஸுக்கு  தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நாம் மத்திய மத்திய கண்டிய வலய  கல்வி காரியாலய பணிப்பாளர் திரு. விஜெரத்னவை  தொடர்பு கொண்ட போது ,

ஆம். கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி அதிபரை தற்காலிக  பதவி நீக்கம் செய்யும்படி எமக்கு கடிதம் ஒன்று இன்று மாலை வந்தது உண்மைதான். இது தொடர்பில் நாம் நாளை பாடசாலை அதிபருக்கு கடிதத்தை சமர்பிப்போம். பதவி நீக்கம்  என வெளியாகும் செய்தி உண்மைதான் என மடவளை நியுஸுக்கு தெரிவித்தார்.
கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி அதிபர் சிஹாரா ரஹீம் பதவி நீக்கம் செய்யபட்டதாக வெளியாகும் செய்தி. உண்மை இதுதான். கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி அதிபர் சிஹாரா ரஹீம் பதவி நீக்கம் செய்யபட்டதாக வெளியாகும் செய்தி. உண்மை இதுதான். Reviewed by Madawala News on 12/01/2016 05:12:00 PM Rating: 5