tg travels

பொத்துவில் பிரதேசத்தில் 20 வருடங்களின் பின்னர் மருத்துவத்துறைக்கு பெண் மாணவி (பாத்திமா ருஷ்தா) தெரிவு.



பொத்துவில் பிரதேசத்தில் சுமார் 20 வருடங்களின் பிற்பாடு மருத்துவத்துறைக்கு பெண் மாணவி தெரிவு.

மாஷா அல்லாஹ்.

பொத்துவில் பிரதேச செயலாளர் NM.முசர்ரத் அவர்களின் புதல்வியும் பொத்துவில் அல் இர்பான் வித்தியாலையத்தின் முன்னாள் மாணவியமான M M.பாத்திமா ருஷ்தா மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 வது நிலையினை பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இப்படி பெண்களின் வளர்ச்சி நம் ஊரில் இருக்கும் போது. அதை ஊக்கப் படுத்தாமல் அவர்களை உதாசீனப் படுத்தும் நபர்களை அடையாளம் காண வேண்டும்.

 அதே போல் பெண்கள் இந்த ஊரில் வைத்தியராக வந்தால் .அது சில ஆண் வைத்தியர்களுக்குப் பிடிப்பதில்லை.

இதன் காரணமாக பல பெண்கள் மிகவும் மன உளைச்சல் படுகிறார்கள்.
இனி இந்த ஊரில் பெண் வைத்தியர் இருந்தால்.
அவர்களை இந்த ஊரில் இருந்து இடமாற்றம் செய்ய யார் எத்தனித்தாலும் அவர்களுக்கு எதிராக பொது மக்கள் ஒன்று திரள வேண்டும்.

ஆசிரியர்கள் இல்லாத நம் ஊரில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான விடயங்கள் உலக அதிசயமே!

ஆசான்களை அதிகமாக வைத்து .கபட நாடகம் ஆடும் சட்டிகளுக்கு இது ஒரு சாட்டையடியே!

வாழ்த்துக்கள் தெரிவானவர்களுக்கு
வாழ்த்துப் பெற இன்னும் படியுங்கள் தெரிவாகாதவர்களுக்கு.....

By: பொத்துவில் தமீம் 
பொத்துவில் பிரதேசத்தில் 20 வருடங்களின் பின்னர் மருத்துவத்துறைக்கு பெண் மாணவி (பாத்திமா ருஷ்தா) தெரிவு. பொத்துவில் பிரதேசத்தில் 20 வருடங்களின் பின்னர் மருத்துவத்துறைக்கு பெண் மாணவி (பாத்திமா ருஷ்தா) தெரிவு. Reviewed by Madawala News on 1/07/2017 01:30:00 PM Rating: 5