Kidny

Kidny

எமது தேசத்தின் அரசியல் ரீதியான எழுச்சிக்கான தீர்வுப் பொதி - 01


இலங்கை அரசியல் கலாசாரத்தைப் பொறுத்த வரையில் அது ரொம்பவும் கீழ்நிலையிலேயே காணப்படுகின்றது. நாம் தெரிவு செய்கின்ற தலைவர்கள் மற்றும் எமது அரசியல் அனுபவிப்புக்கள் என்பன இதற்கு தக்க சான்றுகளாகும். அரசியலைக் கற்றுக்கொள்ளாத சமூகம் அயோக்கியர்களால் ஆளப்படும் என்று லெனின் ஓர் உரையில் குறிப்பிட்டிருந்தார். அதுதான் தற்போது எமது தேசத்திலும் நடந்துகொண்டிருக்கிறது.
 
எமது இந்த இழிநிலைக்கு நாமே காரணம். ஏனெனில் நாமே நமது அரசியல் தலைவர்களைத் தேர்வு செய்கிறோம். நாமே நமது அரசியல் கலாசாரத்தை உருவாக்குகிறோம். வளர்ந்த தேசங்களில் சிறந்த அரசியல் கலாசாரம் காணப்படுகின்றது. அதனாலேயே அது வளர்ந்த தேசமாகியுமிருக்கிறது. ஏனெனில் அங்கு அரசியல் கல்வி கட்டாயக் கல்வியாகக் காணப்படுகின்றது. இதனாலேயே அவர்களால் நல்லதோர் அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்க முடிந்திருக்கிறது.
 
எட்டாந்தரத்தைக் கூட எட்ட முடியாமல் போனவர்களையும், க.பொ.த சாதராண மற்றும் உயர் தரத் தகுதி கூட இல்லாதவர்களையும், படிக்காமலேயே பட்டம் பெற்றவர்களையும் பாராளுமன்றத்திற்கு நாமே தேர்வு செய்து அனுப்பிவிட்டு ஆட்சி சரியில்லை, அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என நாம் காலங்காலமாக அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றோம்.
 
எமது அரசியல் கலாசாரமானது 225 பேருக்கு மாத்திரம் பஞ்சு மஞ்சத்தை வழங்கிவிட்டு வழங்கிய நாமனைவரும் சகதியில் புரண்டுகொண்டிருக்கும் நிலையிலேயே காணப்படுகின்றது. வெறும் வாக்குறுதிகளை நம்பி நம்பியே வாக்குப் போட்டு வாழ்க்கையை இழந்துகொண்டிருக்கிறோம். இனவாதம் தலைவிரித்தாடுகிறது. ஊழல் மோசடியில் தேசமே ஊறிக்கிடக்கிறது. கடன் சுமையில் நாடு தள்ளாடுகிறது. நற் பண்பாடுகளின்றி இளம் சமுதாயம் அல்லாடுகிறது. தேசத்தின் எழுச்சிக்கான கல்வியைச் சரியாகத் திட்டமிடுமளவிற்கு தலைவர்களிடத்தில் கல்வியறிவோ உலகறிவோ இல்லாமலிருக்கிறது. இதனால் வேலையில்லாப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கிறது.
 
எமது அரசியல் கலாசாரத்தில் காணப்படுகின்ற இத்தகைய வங்குரோத்து நிலைமையினை சில புத்திஜீவிகளும் அமைப்புக்களும் உணராமலில்லை. நல்லாட்சியென்றும் ஊழலற்ற தேசமென்றும் சில அமைப்புக்கள் தங்களாலான முயற்சிகளை முன்னெடுத்துக்கொண்டுதானிருக்கின்றன. புத்திஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற ஊடகங்களில் இது பற்றிய தமது அவதானங்களைப் பதிவுசெய்துகொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் ஒரு போதும் எமது தேசத்தின் அரசியல் கலாசாரத்தை சீரமைத்துக்கொள்வதற்கான நிரந்தரத் தீர்வினைத் தந்துவிடப் போவதில்லை.
 
எனவே எதிர்காலத்திலாவது எமது தேசத்தின் அரசியல் கலாசாரத்தை சிறப்பானதாகக் கட்டியெழுப்ப நீண்ட காலத்திட்டமிடலினூடான, முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் கல்வியை எமது இளம் சமுதாயத்தினருக்கு வழங்கவேண்டும். இதுவே எமது தேசத்தை ஆயோக்கிய ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டெடுக்க ஒரே தீர்வாகும். அந்த வகையில் அத்தகைய செயற் திட்டத்தை Raapa Campus ஆரம்பித்துள்ளது.
- Diploma in Political Science (One Year Program)
- B A in Political Science (Three years Program)
 
எனும் இரண்டு பாடநெறிகளை உருவாக்கியுள்ளதோடு இப்பாட நெறிகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்வோருக்கு சர்வதேச மற்றும் இலங்கைப் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்(UGC) அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
 
இப்பாடத்திட்டங்களானது வெறுமனே காகிதத் தகைமைகளுக்காக வேண்டி மாத்திரம் செய்யப்படுகின்ற வழமையான பாடநெறிகளைப் போலன்றி தேசிய மற்றும் சர்வதேச நடைமுறைகளுக்கும் சமகாலத்திற்கும் ஏற்றாற் போல சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
இக்கற்கை நெறியைத் தொடர விரும்பும் தகுதியான மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் Raapa Campus தற்போது மேற்கொண்டு வருகிறது.
இக்கற்கை நெறிகளூடாக சிறுகச் சிறுக எமது தேசத்தில் அரசியல் அறிவினைக் கட்டியெழுப்பி எமது அரசியல் கலாசாரத்தை செம்மையாக்கி எமது தேசத்தின் எழுச்சிக்கு வழி வகுப்பதே எமது நோக்கமாகும்.
 
மேலதிக தொடர்புகளுக்கு:
ரா.ப.அரூஸ்
பணிப்பாளர்
எமது தேசத்தின் அரசியல் ரீதியான எழுச்சிக்கான தீர்வுப் பொதி - 01 எமது தேசத்தின் அரசியல் ரீதியான எழுச்சிக்கான தீர்வுப் பொதி - 01 Reviewed by Madawala News on 5/11/2017 10:49:00 PM Rating: 5