Ad Space avaiable

முகப்பவுடரால் புற்றுநோய்: ஜோன்சன் & ஜோன்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்..


ஜொன்சன்&ஜொன்சன் மருந்து நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்திய பின்னர்தான், தனக்கு கருப்பை புற்றுநோய் வந்தது என்று வழக்கு தொடர்ந்த பெண்ணொருவருக்கு, அந்த நிறுவனம் 110 மில்லியன் டாலருக்கு மேலானஅபராத தொகை வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

4 தசாப்தங்களாக முகப்பவுடரை பயன்படுத்தி வந்த பின்னர், தனக்கு அதனால் புற்றுநோய் உருவானதாக மிசௌரி மாகாணத்தின் வர்ஜினியாவை சேர்ந்த 62 வயதான லோயிஸ் ஸ்லெம்ப் வழக்கு தொடர்ந்திருந்தார். 

தங்களுடைய பொருட்களோடு தொடர்படைய புற்றுநோய் ஆபத்து பற்றி போதியளவு வாடிக்கையாளர்களை எச்சரிப்பதற்கு இந்த நிறுவனம் தவறிவிட்டது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். 

ஆனால், கருப்பை புற்றுநோய்க்கும் முகப்பவுடருக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.ஜான்சன் & ஜான்சன் மருந்து நிறுவனத்திற்கு எதிராக அதனுடைய பவுடர் பொருட்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள சுமார் 2,400 வழக்குகளில் புனித லூயிஸ் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்புத்தான் மிகவும் நீளமானதாகும் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

ஸ்லெம்பின் கருப்பையில் புற்றுநோய் வந்திருப்பது முதலில் 2012 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அது மீண்டும் வந்து, நுரையீரலுக்கும் பரவிய பிறகு, ஸ்லெம்ப் கீமோதெரப்பி எனப்படும் ரசாயன சிகிச்சை எடுத்து வருகிறார். 

தான் பயன்படுத்திய பொருட்களில் ஜான்சன்& ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான முகப்பவுடரும், குளித்த பிறகு பயன்படுத்தும் பவுடரும் அடங்குவதாக ஸ்லெம்ப் தெரிவித்திருக்கிறார்.

"அறிவியல் சான்றுகளை இந்த நிறுவனங்கள் புறக்கணித்துள்ளதோடு, அமெரிக்க பெண்களின் மீதான பொறுப்புணர்வை அவை தொடர்ந்து மறுத்து வந்துள்ளன என்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்" என்று ஸ்லெம்பின் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். 
-BBC-
முகப்பவுடரால் புற்றுநோய்: ஜோன்சன் & ஜோன்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்.. முகப்பவுடரால் புற்றுநோய்: ஜோன்சன் & ஜோன்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்.. Reviewed by Madawala News on 5/07/2017 11:32:00 PM Rating: 5