Kidny

Kidny

14 வது சர்வதேச வெசாக் வைபவத்தில் நிறைவேற்றப்பட்ட 10 அம்சங்கள் கொண்ட கண்டிப் பிரகடணம்.

ஜெ எம் ஹபீஸ்
கண்டியில் இடம் பெற்ற 14 வது சர்வதேச வெசாக் தின வைபவத்தில் கண்டித் தீர்மானங்கள் என்ற தலைப்பில் பத்துத் தீர்மானங்கள் வெளியிடப்பட்டன. பௌத்த விவகார நீதித் துறை அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச மேற்படி கண்டித் தீர்மானத்தை வெளியிட்டுவைத்தார்.

(14.5.2016) அவர் உரையாற்றும் போது தெரிவித்ததாவது -

பௌத்த தர்மத்திலுள்ள 'திரிபீடக' கொள்கை உயிர்களிடத்தே அன்பை செலுத்த வேண்டுமென வழிகாட்டுகிறது. இன்றைய உலக மனிதப் படுகொலைகளுக்கு இது ஒரு தீர்வை முன்வைக்கிறது.அதனைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மகிந்தர் விஜயத்துடன் தேவநம்பிய திஸ்ஸ அரசன் பௌத்த தர்மத்தை ஏற்று  வழிபட்டதன் விளைவே இங்கு பௌத்தம்; பரவக்காரணமானது. நாம் பௌத்த்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களே தவிற உரிமையாளர்கள் அல்ல. எனவே இன்றைய பளத்த தர்மம் மூலம் சர்வதேச நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். நாம் பௌத்த தர்மத்தின் பிரதான சின்னத்தைப் பாதுகாக்கும் நாடாகும் என்றார். அவர் கண்டிப்பிரகடணத்தை வெளியிட்டுவைத்தார்.
அதன் சுருக்கம் பின்வருமாறு.

1.ஒன்றிணைந்த பௌத்த தர்மத்தை உருவாக்கப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

2.சர்வதேச பௌத்த மக்களது பிரச்சினைகளுக்கான முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும்.

3.எதிர்காலத்தில் ஆன்மீகம் ஒழுக்கம் என்பன பேணப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4.ஆயுதத் தயாரிப்பு ஆயுத வினியோகம் என்பன மிகப் பயங்கரமானது. அதனைத் தடுக்க ஒரு திட்டம் தேவை.

5.சுற்றாடல் பாதிப்புக்களில் இருந்து சர்வதேச மக்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் தேவை. இதற்காக சர்வதேச நாடுகள் கூட்டாக இணைய வேண்டும்.

6. மது போதை என்பன இன்று பாரிய பிரச்சினையாகும். இதனைத் தடுக்க நடவடிக்கை தேவை.

7. சமய மோதல்களை தடுக்க இடைத் தொடர்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

8.மனித நேயம் இன்று படிப்படியாக அழிந்து போக ஆரம்பித்துள்ளது. பௌத்த தர்மத்தின் ஊடாக அத்தகைய  மனித நேயம் வளர்க்கப்பட வேண்டும்.

9.அமைதியும் சமாதானமும் நிறைந்த ஒரு உலகை உருவாக்க முன்வர வேண்டும்.

10. எதிர்காலத்தில் தூய பௌத்த தர்மத்தை (நிர்மல பௌத்தம்) பரவலாக்க இலங்கை அரசின் உதவி தேவை ஆகியன ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பிரகடனங்களின் சுருக்கமாகும்.  
 
 
 
14 வது சர்வதேச வெசாக் வைபவத்தில் நிறைவேற்றப்பட்ட 10 அம்சங்கள் கொண்ட கண்டிப் பிரகடணம். 14 வது சர்வதேச வெசாக் வைபவத்தில் நிறைவேற்றப்பட்ட 10 அம்சங்கள் கொண்ட  கண்டிப் பிரகடணம். Reviewed by Madawala News on 5/15/2017 10:35:00 AM Rating: 5